தனி ஒருவன்: கடந்த 2015ல் மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த்சாமி நடித்த ‘தனி ஒருவன்’ படம் திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இந்த படத்தின் 2ம் பாகம் உருவாக்கப்படும் என்றும், மீண்டும் மோகன் ராஜா, ஜெயம் ரவி கூட்டணி இணையும் என்றும் சில வருடங்களாகவே சொல்லப்பட்டு வந்தது. ஆனால் மோகன் ராஜாவும், ஜெயம் ரவியும் தங்களது அடுத்தடுத்த படங்களில் பிசியாக ஈடுபட்டிருந்தனர். ரசிகர்களை நேரிலும் தனது சமூக வலைதளங்களின் மூலமும் சந்தித்த ஜெயம் ரவி வெகு விரைவில் ‘தனி ஒருவன்’ 2ம் பாகம் உருவாகும் என்று கூறினார். இது குறித்து அவர் கூறும்போது,
‘மோகன் ராஜா டைரக்ஷனில் ‘தனி ஒருவன்’ 2ம் பாகத்தின் கதை தயாராகி விட்டது. மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாகத்தில் நான் நடிப்பதற்கு முன்பே ‘தனி ஒருவன்’ படத்தின் 2ம் பாகத்தை உருவாக்க நானும், மோகன் ராஜாவும் திட்டமிட்டோம். அப்போது நாங்கள் வெவ்வேறு படத்துக்கான பணிகளில் ஈடுபட்டிருந்ததால் அப்படம் சம்பந்தமான பணிகளில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் ‘தனி ஒருவன்’ 2ம் பாகம் வெகுவிரைவில் உருவாகும் என்று உறுதி அளிக்கிறேன். அது பற்றி மோகன் ராஜா விரைவில் அறிவிப்பார்’ என்று அவர் கூறினார்.