ஜியோ ஸ்மாட்போனை தொடர்ந்து ஜியோ லேப்டாப் விற்பனை குறைந்த விலையில்

0
5

ஜியோ ஸ்மாட்போனை தொடர்ந்து ஜியோ லேப்டாப் விற்பனை குறைந்த விலையில் கொடுக்க முடியும் என ரிலையன்ஸ் நிறுவனம் ரூ 15000 திலிருந்து விற்பனையை துவக்க புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது.

JIO நிறுவனம் தன் வியாபார உத்தியால் பிரபலம் அடைந்தும் புதிய புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியும் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. அனைத்து துறைகளிலும் தடம் பதித்து வருகின்றது. ஜியோ அறிமுகமான போது பல சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி அவர்களை தன் வியாபாரத்தில் தக்க வைத்து கொண்டது.

ரிலையன்ஸ் நிறுவனம் சிம் விற்பனை, ஸ்மாட் போன் விற்பனை, மளிகை பொருட்கள் விற்பனை என பல துறைகளில் தடம் பதித்து சிறப்பான முறையில் வளர்ச்சி அடைந்து வருகிறது. தற்போது, வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயன்படுத்து வகையில் அடிப்படை அம்சங்கள் கொண்ட லேப்டாப்களை சந்தைகக்கு கொண்டு வர திட்டம் தீட்டியுள்ளது.

ஜியோ ஸ்மாட்போனை தொடர்ந்து ஜியோ லேப்டாப் விற்பனை குறைந்த விலையில்

இந்த திட்டத்தின்படி அடுத்த ஆண்டு முதல் லேப்டாப் விற்பனையை தொடங்க உள்ளது ஜியோ நிறுவனம். ஆனால், இந்த தகவலை ஜியோ நிறுவனம் உறுதிப்படுத்தவில்லை. இப்போதைக்கு ஜியோவின் இலக்கு மாணவர்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் என்பதால், அதற்கான லேப்டாப்கள் டிசைன் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அனைத்து வகையான லேப்டாப்களும் மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், அதாவது அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் லேப்டாப் மார்க்கெட்டில் பெரிய பூகம்ப விற்பனையை டார்கெட் செய்திருக்கிறது ஜியோ நிறுவனம்.

ஜியோவின் இந்த புதிய லேப்டாப் ஜியோ புக் என அழைக்கப்படும். இதற்காக ரிலையன்ஸ் நிறுவனம், தொழில்நுட்ப ஜாம்பவான்களான குவால்காம் மற்றும் மைக்ரோசாப்ட் உடன் இணைந்து இந்த லேப்டாப்பை உருவாக்கி, மார்க்கெட்டில்ல களமிறக்க இருக்கிறது. இதன் மூலம் ஹூட்டின் கீழ், ஜியோ புக் மடிக்கணினியில் குவால்காமிலிருந்து ஒரு சிப் இருக்கும். ரிலையன்ஸ் ஜியோபுக் செயலிகளுக்கான ஆதரவை மைக்ரோசாப்ட் வழங்குகிறது.

இந்த மாத இறுதியில் புதிய ஜியோ லேப்டாப் அறிமுகப்படுத்தப்படும் என கூறப்படுகிறது. அதாவது, கல்வி மற்றும் அரசு நிறுவனங்களுக்கு புதிய லேப்டாப் கிடைக்கும். அடுத்த மூன்று மாதங்களுக்குள் வாடிக்கையாளர்களுக்கு வணிக ரீதியாக ஜியோ நிறுவனத்தின் ஜியோ புக் லேப்டாப் கிடைக்கும். அதாவது, வணிக மார்க்கெட்டில் களமிறங்கும் ஜியோ லேப்டாப் இந்த ஆண்டு இறுதியில் வெளியிடப்படும்.

கொரோனா தொற்றினால் அனைவரும் வீட்டிலிருந்து பணி செய்ய அறிவுறுத்தப்படதன் விளைவு அனைவரும் லேப்டாப்பின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டு வருகின்றனர். அனைத்து பணிகளுக்கும் ஸ்மாட் போனைக் கொண்டு பணி செய்ய இயலாது. அதனால், LAPTOP ன் முக்கியத்துவத்தால் குறைந்த விலையில் வாடிக்கையாளர்களுக்கு லேப்டாப் வழங்க ஜியோ நிறுவனம் திட்டத்தை வகுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here