கடி ஜோக்ஸ் தமிழ் கடி நகைச்சுவைகள்

0
76

கடி ஜோக்ஸ்: நகைச்சுவை மனிதனுக்கு மிக முக்கியமான ஓன்று. அந்த நகைச்சுவை மனிதனிடம் இல்லை என்றால் அவன் மன நோயாளியாக மாறி விடுவான் என்பதில் துளியும் ஐயமில்லை.

குழந்தை பருவத்தில் எதை பற்றியும் தெரியாத நிலையில் கவலைகள் நம்மை சூழாது. ஆனால் குழந்தை பருவத்திலிருந்து பெரியவராக வளர வளர நம் பின்னால் கவலைகளும் நம்மை தொடரும். அந்த கவலைகள் நம்மை மிகுந்த கவலைகளில் ஆழ்த்தி நம் மனதை பாதிக்கும்.

சிறு வயதில் எதற்கெடுத்தாலும் சிரிப்போம் அது எதையும் அறியாத வயது. பெரியவராக வளர்ந்தரை சாதாரணமாக சிரித்து வைக்க முடியாது. அப்படிப்பட்டவரையும் சிரிக்க வைக்கும் ஆயுதமாக கடி நகைச்சுவைகள் (KAID JOKES) இருக்கிறது.

”வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்” என்பதை கேட்டிருப்போம். நன்றாக சிரித்து வாழ்ந்தால் அனைத்து விதமான நோய்களும் போகும் என்பது உண்மை. ஆகையால் நாமும் கடி ஜோக்ஸினை படித்து சிரிப்போம் நீண்ட ஆயுளுடன் வாழ்வோம்.

கடி ஜோக்ஸ் தமிழ் கடி நகைச்சுவைகள்

சிறந்த கடி ஜோக்ஸ்:

 • பேன்‌ ஏன்‌ மேலேயே சுத்துது?உட்காருவதற்கு அதற்கு கால்‌ இல்லை அதனால்‌ தான்‌.
 • என்ன டாக்டர்‌! என்னை அறுவை சிகிச்சை பண்ணுவீங்கன்னு பார்த்தா கடி ஜோக்கா சொல்லிட்டிருக்கீங்க.இதுதான்‌ அறுவை சிகிச்சை
 • இந்தியாவில்‌ ரொம்ப கவலையான மாநிலம்‌ எது?Worry sa (ஒரிஸா)
 • பொண்ணுக்கு என்ன வயசாகிறது?ஆடி வந்தா 16…ஆடாம வந்தா?
 • குத்தியவுடன்‌ ஏன்‌ ரத்தம்‌ வருது?யாரு குத்தினதுன்னு பார்க்க வருது
 • சாப்பிடறதுக்கு முன்னாடியே நிறைய ஏப்பம்‌ வருது. என்ன பண்றது டாக்டர்‌?ஏப்பம்‌ வர்றதுக்கு முன்னாடியே சாப்பிட்டுடுங்க.
 • அதான்‌ டி.வி.யில்‌ நியூஸ்‌ போடுறானேன்னு நியூஸ்‌ பேப்பரை நிறுத்தினது தப்பாபோச்சு.ஏன்‌ என்னாச்சு?இப்பப்‌ பாருங்க… ஓசி பேப்பர்‌ வாங்க வரும்‌ பக்கத்து வீட்டுக்காரங்க, கொஞ்சம்‌ டி.வி. இருந்தாக்‌ கொடுங்க. நியூஸ்‌ பார்த்துட்டு தர்றேன்னு சொல்றாங்க.

இதையும் படியுங்கள்: தமிழ் விடுகதைகள்

 • சின்ன காயம்‌ தானே… அதுக்கு இவ்வளவு பீஸா… டாக்டர்‌?இப்படிக்‌ கேட்பீங்கன்னு தான்‌ பேண்டேஜை பெரிசா போட்டிருக்கேன்‌.
 • என்னதான் ஒருத்தன் குண்டா இருந்தாலும் அவனை துப்பாக்கிக்குள்ள போடா முடியாது.
 • தேன் கொட்டினா வலிக்கும் … பாம்பு கொட்டினா வலிக்கும்… முடி கொட்டினா வலிக்குமா?
 • பொங்கலுக்கு கவர்மெண்ட்டுல லீவு கொடுப்பாங்க… ஆனா இட்லி, தோசைக்கு கொடுப்பாங்களா?
 • லைப்ல ஒண்ணுமே இல்லனா போர் அடிக்கும். தலையில ஒண்ணுமே இல்லனா கிளார் அடிக்கும்.
 • திருவள்ளுவர் 1330 குறள் எழுதியிருந்தாலும், அவரால் ஒரு குரலில்தான் பேச முடியும்.
 • கங்கை ஆத்துல மீன் பிடிக்கலாம், காவிரி ஆத்துல மீன் பிடிக்கலாம் ஆனால் அய்யர் ஆத்துல மீன் பிடிக்க முடியுமா?
 • மீன் பிடிக்கிறவனை மீனவன் என்று சொல்லலாம்… நாய் பிடிக்கறவனை நாய்னு சொல்ல முடியுமா?
 • எப்போ பார்த்தாலும்‌ மரத்து மேல்‌ ஏறி உக்கார்ந்திருக்காரே யார் இவர்‌? இவர்‌ தாங்க எங்க கிளை செயலாளர்‌.
 • போலீஸ்காரர்‌ அடிச்ச உடனே அந்த ஆளுக்கு பேச்சே வர்லைங்க ஏன்‌? ஊமைக்காயம்‌ பட்டுடுத்தாம்‌.
 • உங்க கடிகாரம்‌ ஓடாதா? நான்‌ தான்‌ அதை கையில்‌ கட்டியிருக்கேனே.
 • உங்க மகன் சிகரெட் பிடிக்கிறானே! உங்களுக்கு தெரியுமா? எனக்கு சிகரெட் பிடிக்க தெரியாதுங்க!
 • ஏன் பாத்ரூம் கதவை திறந்து வச்சுகிட்டே குளிக்கிற? அப்பதான் யாராவது எட்டிப் பார்த்தா தெரியும்!

இது போன்ற நகைச்சுவை கடிகளை நீங்களும் உங்கள் நண்பர்கள் உறவினர்களிடன் கூறி சிரித்து வாழுங்கள். மேலும், இது போன்ற கடி நகைச்சுவைகள் மற்றும் ஆன்மீகம், ஜோதிடம், கல்வி, செய்திகள் அனைத்தையும் அறிய தலதமிழ் இணையதளத்தை பின் தொடருங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here