நடிகர் மம்மூட்டியுடன் இணையும் ஜோதிகா புதிய திரைப்படத்தின் அறிவிப்பு

0
21

நடிகர் மம்மூட்டி மலையாளத்தில் சிறந்த நடிகராக இன்றளவும் இருப்பவர் அவருடன் இணைந்து படம் ஓன்றில் நடிக்கவுள்ளார் நடிகை ஜோதிகா அந்த படத்தின் பெயர் காதல் என்று வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் தனக்கென இடத்தில் சிறப்பான திறமையை காட்டி நடிப்பவர் நடிகை ஜோதிகா. தமிழ் சினிமாவில் பூவெல்லாம் உன்வாசம் படத்தின் மூலம் அறிமுகமாகி இன்று முன்னணி நடிகையாக வலம் வருபவர். நடிகை ஜோதிகா பெண்களை மையப்படுத்தி வரும் பல படங்களில் தற்போது கவனம் செலுத்தி அதில் வெற்றி பெற்றும் வருகின்றார்.

நடுத்தரமான வயது பெண்கள் வாழ்வில் ஏற்படும் பல விஷயங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் கதை அம்சம் கொண்ட படங்களில் நடிப்பதை அதிகமாக விரும்பி நடிக்கினாறார். இவர் கடைசியாக நடித்த படம் 2021ம் ஆண்டு வெளியான சசிகுமாருடன் நடித்த உடன்பிறப்பு இப்படமும் குடும்ப பின்னணி படமாகவும் அண்ணன் தங்கை பாசத்தை கூறும் படமாகவும் காணப்படும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

நடிகர் மம்மூட்டியுடன் இணையும் ஜோதிகா புதிய திரைப்படத்தின் அறிவிப்பு

நேற்று ஜோதிகாவின் பிறந்த நாளை முன்னிட்டு மலையாள நடிகர் மம்மூட்டி தனது இன்ஸடாகிராமில் அவருடன் நடிக்கும் புகைப்படத்தை இணைத்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். இவர்கள் இணைந்து நடிக்கும் படத்திற்கு காதல் எனப் பெரிடப்பட்டுள்ளது.

இப்படத்தினை ஜியோ பேபி இயக்குகிறார். இவர் இயக்கத்தில் வெளியான ‘த கிரேட் இந்தியன் கிச்சன்’ திரைப்படம் மிகுந்த வரவேற்பை பெற்றது. இதை தமிழில் ஐஸ்வர்யா ராஜேஷ் ரீமெக் செய்துள்ளார். இந்நிலையில், ஜோதிகா மம்முட்டி இணைந்து நடிக்கும் படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை அதிகரித்துள்ளது.

கடந்த வாரங்களில் சூரரைப் போற்று படத்திற்காக சூர்யா மற்றும் ஜோதிகா இந்திய குடியரசு தலைவரிடம் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here