காஜல் அகர்வால்: திருமணத்திற்கு பிறகு நடிப்பில் பிசியாகி விட்டார் காஜல் அகரவால். தற்போது ‘இந்தியன் 2’, ‘கருங்காப்பியம்’, ‘கோஸ்டி’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதற்காக சென்னை வந்துள்ள அவர் நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,
நீண்ட இடைவெளிக்கு பிறகு சென்னை வந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. குழந்தை பிறந்த 3 மாதத்திற்குள் மீண்டும் நடிக்க வந்துவிட்டேன். கணவர் மற்றும் குடும்பத்தினருக்கு இதில் கொஞ்சம் வருத்தம்தான். டாக்டர்கள் 10 மாதம் வரை ஓய்வெடுக்க சொன்னார்கள். ஆனால் என்னை பொறுத்தவரை நான் சினிமாவை ஆழமாக நேசிக்கிறேன். திருமணத்திற்கு முன்பு நான் நடித்து முடிக்க வேண்டிய எல்லா படங்களையும் முடித்து விட்டுதான் திருமணம் செய்தேன். குழந்தை பெற்றேன்.
இப்போது எனக்காக பல படங்கள் காத்திருக்கிறது. நான் எப்படி வீட்டில் இருக்கு முடியும்? குழந்தையை பாதுகாக்க எனது அம்மா இருக்கிறார். அவரும் என்னோடு படப்பிடிப்புக்கு வருகிறார். கேமராவுக்கு முன்னால் கேரக்டராகவும், பின்னால் ஒரு தாயாகவும் வாழ்ந்து வருகிறேன். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று அவர் மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.