இந்தியன் 2 படத்திற்காக குதிரையேற்ற பயிற்சி பெறும் காஜல் அகர்வால்.

0
6

காஜல் அகர்வால்: தமிழில் பழநி என்ற திரைப்படம் மூலம் காஜல் அறிமுகமானார். பிறகு அவர் சரோஜா, பொம்மலாட்டம் போன்ற படங்களில் நடித்திருந்தாலும் அவர் ராம்சரண் தேஜாவுடன் இணைந்து நடித்த ‘மாவீரன்’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. இப்படம் காஜலுக்கு திரையுலகில் திருப்புமுனையாக அமைந்தது. அதன் பிறகு அவர் தமிழின் முன்னணி நடிகர்களான கார்த்தியுடன் நான் மகான் அல்ல, விஜய்யுடன் துப்பாக்கி, ஜில்லா, மெர்சல் சூர்யாவுடன் மாற்றான் மற்றும் அஜித்துடன் விவேகம் போன்ற படங்களில் இணைந்து நடித்து புகழ் பெற்றார்.

இவர் கடந்த 2020 ம் ஆண்டு வடஇந்திய தொழிலதிபர் கெளதம் கிட்ச்லுவை காதல் திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு அவர் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடிப்பதற்காக ஒப்பந்தமானார். பின்னர் அவர் கர்ப்பமான நிலையில் படப்பிடிப்பிலிருந்து விலகி இருந்தார். அவருக்கு சமீபத்தில் தான் ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனிடையே இந்தியன் 2  திரைப்படமும் சில இடையூறுகளினால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்பொழுது இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பும் துவங்கியுள்ளது.

காஜல் அகர்வாலும் குழந்தை பிறந்து சில மாதங்கிளிலேயே இந்தியன் 2 படப்பிடிப்பில் கலந்து கொள்ள சென்னை வந்துள்ளார். அவரை குதிரையேற்ற பயிற்சி கற்க வேண்டும் என்று படக்குழு உத்தரவிட்டுள்ளது. அவர் மகதீரா (தமிழில் மாபவீரன்) என்ற தெலுங்கு படத்தில் ராணியாக நடித்த பொழுது குதிரையேற்ற பயிற்சி பெற்றி்ருந்தார். தற்போது பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் இந்தியன்2 திரைப்படத்திற்காக குதிரையேற்ற பயிற்சி பெறுகிறார்.

kajal agarwal

இது பற்றி காஜல் அவர்கள் கூறுகையில், ‘குழந்தை பிறந்த பிறகு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்புவது கடினமாக உள்ளது. குறிப்பாக தற்காப்பு பயிற்சியின் போது எனது உடல் ஒத்துழைக்கவில்லை.பெண்கள் தங்கள் உடலை நினைத்து கவலை கொள்ளாமல் மீண்டெழ வேண்டும். நமது உடல் மாறலாம் அல்லது மாறாமல் இருக்கலாம். ஆனால் நமது ஆர்வம் மாறக்கூடாது. அதற்கு நாம் முக்கியத்துவம் தர வேண்டும். அதுபோல் குதிரையேற்றமும் எனக்கு முதல் நாளில் சிரமத்தை கொடுத்தது. ஆனால், இப்போது எனது ஆர்வம் காரணமாக அது பழகி விட்டது. சினிமாவில் மேலும் சாதிக்க வேண்டும் என்ற வெறியும் அதிகரித்துள்ளது’ என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here