ஆளவந்தான் மற்றும் சச்சின் படங்களை ரீ ரிலிஸ் செய்யவுள்ள தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அறிவிப்பு.
உலக நாயகன் நடிப்பில் வெளியான திரைப்படம் ஆளவந்தான். நடிகர் விஜய் நடிப்பில் வெளியான படம் சச்சின் இவ்விரு படங்களையும் ரீ ரிலிஸ் செய்ய போவதாக தயாரிப்பாளர் கலைப்புலி தாணு கூறியுள்ளார்.
கமலஹாசனின் லோகேஷின் இயக்கத்தில் வெளியான விக்ரம் மாபெரும் வெற்றி அடைந்தது. அனைத்து தரப்பு ரசிகர்களும் இப்படத்தை பார்த்து ரசித்து வந்தனர். அதனை தொடர்ந்து, கமல்ஹாசன், ரவீனா டண்டன், மனிஷா கொய்ராலா நடித்த ‘ஆளவந்தான்’ திரைப்படம் கடந்த 2001ஆம் ஆண்டு வெளியாகியது.
இந்த படத்தின் பட்ஜெட் அந்த காலத்திலேயே ரூ.20 கோடி. இது இன்றைய மதிப்பில் ரூ.400 கோடி என்பது குறிப்பிடத்தக்க்கது. இந்த படம் வசூல் ரீதியாக படுதோல்வி அடைந்தது. இதனால் கமலுக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்தது. பல இடங்களில் தாணு கமல்ஹாசனை கடுமையாக விமர்சனம் செய்தார். ஆனால் ஒரு கட்டத்துக்குப் பிறகு இந்த படத்துக்கான பார்வையாளர்கள் உருவாகினர்.

இந்நிலையில் இப்போது ‘ஆளவந்தான்’ படத்தை டிஜிட்டலாக்கி மீண்டும் திரையரங்குகளில் மீண்டும் ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் கடந்த சில ஆண்டுகளாகவே சொல்லப்பட்டு வந்தாலும், இப்போது விக்ரம் வெற்றியை அடுத்து இந்த வேலைகள் சூடுபிடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இதுபற்றி சமீபத்தில் பேசிய கலைப்புலி தாணு “ஆளவந்தான் மட்டுமில்லை விஜய்யின் சச்சின் படத்தையும் ரி ரிலீஸ் செய்யப்போகிறேன்” எனக் கூறியுள்ளார். சச்சின் படமும் திரையரங்கில் ரிலீஸான போது பெரிய வரவேற்பைப் பெறவில்லை. ஆனால் அதன் பின்னர் தொலைக்காட்சி இணையம் ஆகியவற்றில் அந்த படத்துக்கான ரசிகர்கள் உருவாகினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சச்சின் படத்தில் விஜய் மற்றும் வடிவேலு இணைந்து வேற லெவலில் நகைச்சுவை செய்திருப்பர். இது அப்படத்தின் ரீ ரிலிஸிற்கு பெரும் துணையாக இருக்கும் என ரசிகர்கள் கருதுகின்றனர்.