ராகுல் காந்தி நடத்தி வரும் பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்க இன்று தலைநகர் டெல்லிக்கு பயணிக்கிறார் மக்கள் நீதி கட்சியின் நிறுவனர் மற்றும் திரைப்பட உலக நாயகன் கமலஹாசன்.
காங்கிரஸ் முன்னாள் தலைவரும் தற்போதையே எம்.பியுமான ராகுல் காந்தி அவர்கள் செப்டம்பர் மாதம் 7ந் தேதி பாரத ஓற்றுமை யாத்திரையை தமிழகத்தில் கன்னியாக்குமரியில் தொடங்கினார். நேற்று அரியானாவில் நடை பயணத்தை மேற்கொண்டிருந்த ராகுல் இன்று டெல்லியை சென்றடைகிறார். அங்கு அவருடன் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் மற்றும் அவரின் தொண்டர்கள் கட்சி நிர்வாகிகள் என பல்லாயிர கணக்கானோர் நடை பயணத்தில் கலந்து கொள்கின்றனர்.
இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியுள்ள அக்கட்சி தலைவர் கமல்ஹாசன்,” உயிரே உறவே தமிழே வணக்கம். அதில் ஒரு கட்சியின் தலைவராக அல்லாமல் என்னை ஃபேலோ சிட்டிசன் என்றும் குறிப்பிட்டிருந்தார். ஒரு இந்தியனாக இழந்து கொண்டிருக்கும் மாண்பை மீட்டெடுக்கும் முயற்சியாக இதனை நான் கருதுகிறேன். கட்சிகளுக்கு அப்பாற்பட்டு இம்முன்னெடுப்பில் தலைநகரில் வாழும் தமிழர்களும் பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டும் என்பது என் ஆசை.

இது தேசத்திற்கான ஒரு நடைபயணம். இது கட்சிகளுக்கு அப்பாற்பட்டது. டிசம்பர் 24, 2022 நான் உங்களிடத்தில் வருகிறேன். உங்கள் அனைவரையும் சந்திக்க விரும்புகிறேன். வாருங்கள் புதிய இந்தியா படைப்போம், நாளை நமதே..ஜெய்ஹிந்த்” என பேசியுள்ளார்.
தமிழகம், கேரளா, கர்நாடகா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை கடந்து ராகுல் காந்தி நடை பயணம் மேற் கொண்டுள்ளார். இவருடன் கட்சி நிர்வாகிகள் கட்சி தொண்டர்கள் என பல முன்னணி தலைவர்களும் பங்கு பெற்றனர். இதனை தொடர்ந்து காஷ்மீரில் நடை பயணத்தை முடிக்கவுள்ளார்.
இதையும் படியுங்கள்: ஐபிஎல் மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸின் தந்திரம்
இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.