உடல்நல குறைவால் மருத்துவமனை சென்ற கமல்ஹாசன் வீடு திரும்பினார். உலக நாயகன் காய்ச்சல் காரணமாக நேற்று சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகி்ச்சை மேற்கொண்டு இன்று காலை வீடு திருப்பினார்.
திரைத்துறையில் சிறுவயதிலிருந்தே கலையில் ஆர்வம் மிகுந்து பல படங்களில் நடித்து உலக நாயகனாக வளர்ந்தவர் கமல் என்றால் அது மிகையாகாது. இறுதியாக இவர் நடித்த விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது வசூலிலும் சாதனை புரிந்தது. தற்போது, தொடர்ந்து இந்தியன் 2 ல் விறுவிறுப்பாக நடித்து வருகின்றார். இப்படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார்.
பல காரணங்களால் பலமுறை தடைப்பட்ட இந்தியன் 2 திரைப்படத்தின் தற்போது விரைவில் வெளியாகும் அளவில் சிறப்பாக படப்பணிகள் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து சிவகார்த்திகேயன், உதயநிதி படங்களை தயாரிக்க உள்ளார். கமல் அடுத்ததாக மணிரத்னம் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்களும் வந்து கொண்டு உள்ளது.

இந்நிலையில், ஹைதராபாத்தில் உள்ள மூத்த இயக்குனர் கே.விஸ்வநாதன் அவர்களின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு திரும்பிய கமல் தனக்கு உடல் நலத்தில் சிறிய மாற்றத்தை உணர்ந்து தானே சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை மேற் கொண்டார் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு சிறிய காய்ச்சல் காரணமாகவே அனுமதிக்கப்பட்டுள்ளார் விரைவில் வீடு திரும்புவார் என்று அறிக்கை விட்டிருந்தனர்.
இதையும் படியுங்கள்: அவதார் படத்தின் 2ம் பாகத்தின் டீரைலர் ரசிகர்களை கவர்ந்து வருகிறது
இன்று காலை உடல் நலனில் முன்னேற்றம் கண்டவுடன் உலக நாயகன் கமல் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளார். இவர் தொடர்ந்து படங்களிலும் தயாரிப்பு பணிகளிலும் சமூக பணியான கட்சி பணி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் அயராது பணியாற்றி வருவதால் சில உடல் சார்ந்த பிரச்சனைகள் வருவது இயல்பு அதனால் மருத்துவ பரிசோதனைகளையும் மருத்துவ ஆலோசனைகளையும் பெற்று வீடு திரும்பி உள்ளதாக அவரை சார்ந்த வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
இது போன்ற பல தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பாருங்கள்.