வாக்களிப்பது ஜனநாயகத்திற்கு நீங்கள் கொடுக்கும் முதல் முத்தம். வாக்களிக்க வேண்டும் என்ற காதல் இருந்தால் தான் ஜனநாயகத்துடன் வாழ முடியும் என்றும் கமல்ஹாசன் மாணவர்களிடம் பேச்சு.
திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் (NIT), ‘NITTFEST’ என்ற பெயரில் கலைநிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. இதில், நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் கலந்து கொண்டார்.
அப்போது மாணவர்கள் பல கேள்விகளை எழுப்பினர் உலக நாயகனும் அனைத்து கேள்விகளுக்கும் பதில் கூறினார். நான் ஜோக் அடித்து அது உங்களுக்கு புரியவில்லை என்றால் அது உங்களின் தோல்வி. அதற்கு நீங்கள் சிரித்தால் அது நமக்கு வெற்றி. எனக்கு கே.பாலசந்தர் போன்ற நல்ல ஆசிரியர்கள் எனக்கு கிடைத்தார்கள். எனக்கு பாடம் சொல்லித் தர சம்பளமும் வழங்கினர்.
நான் ஒரு பெண்ணை காதலிப்பதற்கு, எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடலை தான் பாடினேன். எஸ்.பி.பி., எனக்கு, 200 படங்களுக்கும் மேல் பாடியுள்ளார். அதைவிட, எனது நேரடி தெலுங்குப் படங்கள் அல்லாத அனைத்து படங்களுக்கும் அவரே எனது குரலாக இருந்துள்ளார்.

கவிஞர் வாலி போன்றோரால் நானும் கவிஞனாகும் வரம் பெற்றேன். வாலி பிறர் மனம் புண்படாதபடி பாடுபவர். எனது மூத்தவர்களான எஸ்.பி.பி, இளையராஜா ஆகியோரை என் நண்பர்களாக நினைத்தேன். உண்மையில் அவர்கள் என் குருமார்கள் என்றும் கூறினார்.
தொடர்ந்து அரசியல் குறித்த கேள்விகளும் கேட்கப்பட்டது. அரசியல் என்பது உங்களது கடமை. அது தொழில் அல்ல. வாக்கு அளிக்க வயது வந்தும் உங்களில் பலர் வாக்காளர் பட்டியலில் பெயர் கூட சேர்க்காமல் இருக்கின்றீர்கள்.
முதலில், வாக்களிக்க வயது வந்தால், வாக்காளர் பட்டியலில் பெயரை சேருங்கள். வாக்களிப்பது ஜனநாயக கடமை. ஜனநாயக கடமையாற்ற இல்லை என்றால் கேள்வி கேட்க உங்களுக்கு அருகதை இல்லை என்று அர்த்தம்.
ஜனநாயகத்தை நாம் விழிப்போடு பார்த்துக்கொண்டு இருக்க வேண்டும். நம் கடமையை நாம் செய்யவில்லையென்றால் ஜனநாயகம் என்று நாம் நம்பி கொண்டிருக்கும் பலம், திருடர்கள் கையில் தான் இருக்கும். தேர்தலில் வாக்களிப்பது என்பது ஜனநாயகத்திற்கு கொடுக்கும் முதல் முத்தம்.
இதையும் படியுங்கள்: அடுத்த படத்தில் சூரியாவுடன் இணைந்து நடிப்பதாக தெரிவித்தார் நடிகர் கமல்
அந்த முத்தம் கொடுத்தால் தான் ஜனநாயகத்துடன் குடும்பம் நடத்த முடியும். எனவே, பிடிக்குதோ.. பிடிக்கவில்லையோ.. முதல் முத்தத்தை தவறாமல் கொடுங்கள். அனைவரும் வாக்களியுங்கள்” என்றார்.
இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.