ஏறு தழுவுதல் நம் அடையாளம் தடைகளை வீரத்துடன் முறியடிப்போம்-கமல்

0
10

ஏறு தழுவுதல் நம் அடையாளம். இயற்கையோடும் கால்நடைகளோடும் இரண்டறக் கலந்து வாழும் தமிழ்ப் பண்பாட்டின் தொடர்ச்சி. ஜல்லிக்கட்டு ஒரு ரத்த விளையாட்டோ, கொடூரச் செயலோ அல்ல என்று உச்சநீதி மன்றம் குறிப்பிட்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது. எத்தனைத் தடைகள் வந்தாலும் வீரத்துடன் அதை முறியடிப்போம் என்று மக்கள்நீதி மையத்தின் தலைவரும் மற்றும் நடிகருமான கமலஹாசன் சமூக வலைத்தளத்தின் மூலம் தெரிவித்துள்ளார்.

சென்னை மெரினா கடற்கரையில் பல்லாயிரக் கணக்கான மக்கள் கூடி இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். நான்கு ஆண்டுக்கு முன் தமிழக அரசு உட்புகுந்து இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டை விளையாட அனுமதித்தது.

தமிழகத்தின் பிரபலமான விளையாட்டுகளில் முதன்மையானது. ஜல்லிக்கட்டு இதனை கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்னர் பீட்டா என்ற நிறுவனம் விலங்குகளை துன்பம் செய்வதாக கூறி உச்சநீதி மன்றத்தில் வழக்கு பதிந்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் இந்த விளையாட்டுக்கு தடை விதித்தது. இதனால் தமிழகத்தில் இளைஞர்கள் முதல் அனைவரும் போராட்டம் நடத்தினர்.

ஏறு தழுவுதல் நம் அடையாளம் தடைகளை வீரத்துடன் முறியடிப்போம்-கமல்

அது தொடர்பான வழக்கில் தமிழக அரசும், `ஜல்லிக்கட்டு என்பது காளைகளை துன்புறுத்தும் விளையாட்டு அல்ல, உச்ச நீதிமன்ற அதிகாரிகள் ஒருமுறை அதனை நேரில்வந்து பார்க்கவேண்டும்’ என்று உச்ச நீதிமன்றத்தில் கூறியிருந்தது.

பின்னர் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்ததையடுத்து, அடுத்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுமா என்று கேள்வியெழுந்தது. இந்த நிலையில் தமிழக அரசு இன்று, `2023-ல் திட்டமிட்டபடி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். அதற்கான ஏற்பாடுகள் நடைப்பெற்றுவருகின்றன’ எனத் தெரிவித்திருக்கிறது. அதைத் தொடர்ந்து நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் ஜல்லிக்கட்டு குறித்து ட்வீட் செய்திருக்கிறார்.

இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here