கமலஹாசனின் 234 வது படத்தின் அடுத்த பயணம் 35 ஆண்டுகளுக்கு பின்

0
3

கமலஹாசனின் 68 வது பிறந்தநாளில் அவரது ரசிகர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா துறையினர், மக்கள் நீதி மையத்தின் தொண்டர்கள் என அனைத்து தரப்பினரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

பன்முகம் கொண்ட கலைஞனாக சிறு வயதிலிருந்தே தன் திறமையால் வளர்ந்து யாரும் அடைய முடியாத மைல் கல்லை கடந்து வந்து உலக நாயகனாக அனைவராலும் கொண்டாடும் அளவிற்கு அவரின் திறமை தமிழ் பற்றாளனாகவும் மக்கள் மீது பேரன்பு கொண்டவனாக இருந்தனால் மக்கள் நீதி மையம் என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருபவர்.

உலக நாயகனின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று மாலை 6 மணிக்கு 35 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் கூட்டணியில் அடுத்தகட்ட படப்பிடிப்பை தொடங்குவதாகவும் ஓர் அறிவிப்பை தனது சமூக வலைதளத்திலிருந்து பதிவு செய்து ரசிகர்களின் ஆராவாரத்தை பெற்றுள்ளார்.

கமலஹாசனின் 234 வது படத்தின் அடுத்த பயணம் 35 ஆண்டுகளுக்கு பின்

35 ஆண்டுகளுக்கு பிறகு அதாவது கமலுக்கு மிகப் பெரும் வெற்றி படமாக அமைந்த நாயகன் திரைப்படத்திற்கு பிறகு மணிரத்னத்துடன் அடுத்த 234 வது படத்தில் இணைவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இயக்குனர் ஷங்கரின் இந்தியன் 2 படத்தில் தற்போது நடித்து வருகின்றார்.இப்படத்தின் பணிகள் 70 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது. அடுத்த வருடம் திரையரங்குகளில் ரீலிஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பல காரணங்களால் பல முறை நிறுத்தப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்புகளால் தாமதம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்: கமலின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தியன் 2 படத்தின் ஃப்ஸ்ட் லுக் வெளியீடு

திரையுலகை ஓட்டுமொத்தமாக ஆண்வர் இந்த ரசிகர்களால் ஆண்டவர் என்று அழைக்கப்படும் உலக நாயகன் இவர் நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் வெற்றியை தவறியதில்லை. இன்றளவும் வளர்ந்து வரும் இளைஞர்களின் கூட்டணியிலும் இயக்குனர் லோகேஷ்கனகராஜ் என்னும் இளைய இயக்குனர்களிடமும் நடித்து வெற்றி பெற்றுள்ளார்.

சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று வசூலில் பெரும் சாதனை புரிந்து வந்தது. அதற்கடுத்தப்படியாக இந்தியான் 2 வில் நடித்து வரும் கமல் அடுத்ததாக தனது 234 வது படத்தில் இயக்குனர் மணிரத்னத்துடன் இணைந்துள்ளார். கமலின் ராஜ் கமல் இன்டர்நேஷன்ல் பிலிம்ஸ், மெட்ராஸ் டாக்கிஸ், உதயநிதியின் ரெட் ஜெயின்ட் மூவிஸ் மேக்கர்ஸ் தயாரிக்கிறது.

இன்று இயக்குனர் ஷங்கர் இந்தியன் 2 பாகத்தின் முதல் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்துக்கள் கமல் சார் என தெரிவித்து இருந்தார்.

இது போன்ற பல தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை அணுகுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here