இந்தியன் 2 ல் கமல்ஹாசன் செய்த செயல் சங்கரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது

0
14

இந்தியன் 2 கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் திரைப்படத்தில் ஓரு காட்சியில் முழுநீல வசனத்தை டேக் செய்யாமல் ஓரே டேக்கில் பேசியுள்ளதாகவும் இதை பார்த்த இயக்குனர் சங்கர் ஆச்சரியமாக கமலை பார்த்ததாகவும் கூறப்படுகிறது.

இந்தியன் முதல் பாகம் மாபெரும் வெற்றியை பெற்றது. சரியாக ஆன்லைகள் இல்லாத காலத்தில் பட்டிதொட்டி எங்கும் பாடல்களும் படமும் சிறப்பாக திரையரங்கில் ஓடியது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியை தொடர்ந்து இந்தியன் 2 எடுக்க வேண்டும் என இயக்குனர் கேட்க அதற்கு என்ன செய்யலாம் என பச்சை கொடி கமலிடமிருந்து காட்டப்பட்டது.

அதனை தொடர்ந்து இந்தியன் 2 படப்பிடிப்பு காட்சிகள் நடைபெற்று கொண்டு இருந்த நேரத்தில் கொரோனா தொற்று காரணமாக நிறுத்தப்பட்டது. பின் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட கிரேன் விபத்து காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இப்படியாக 2 வருடமாத்திற்கும் மேலாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

இடையில் உலக நாயகனின் விக்ரம் படம் திரைக்கு வந்து செம ஹீட் ஆகி உள்ளது. இந்நிலையில், கிட்டத்தட்ட 60 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்தியன் 2 ல் கமல்ஹாசன் செய்த செயல் சங்கரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது

இதனிடையே இயக்குனர் ஷங்கர் தெலுங்கில் ராம் சரணை வைத்து RC 15 என்னும் படத்தை இயக்கி வருகிறார். எனவே இப்போது ஷங்கர் ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் வேலை செய்யும் கட்டாயம் ஏற்பட்டு உள்ளதால் அவரிடம் உதவி இயக்குனர்களாக இருந்த வசந்தபாலன், சிம்பு தேவன், அறிவழகன் ஆகியோரை இந்தியன் 2 படம் முழுக்க பணியாற்ற வைத்திருக்கிறார்.

இதையும் படியுங்கள்: வாக்களிப்பது ஜனநாயகத்திற்கு நீங்கள் கொடுக்கும் முதல் முத்தம்-கமல்ஹாசன்

லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை ரெட் ஜெயண்ட் ரிலீஸ் செய்கிறது. இந்த படத்தில் ராகுல் ப்ரீத் சிங், சமுத்திர கனி. பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் முந்தைய சூட்டிங்கில் காஜல் அகர்வால் ஏற்கனவே நடித்து முடித்துவிட்டார்.

கமலஹாசன் நடிப்பு மட்டுமல்ல கதை, திரைக்கதை, நடனம், இயக்கம், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவர். அதே போல் பல லாங்குவேஜ் பேசுவதிலும் தேர்ந்தவர். இப்போது இந்தியன் படத்திற்காக ஒரே டேக்கில் அதாவது 10 நிமிடத்தில் 14 மொழிகளில் பேசி இருக்கிறார். இந்த தகவல் இப்போது இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது.

இப்படம் ஜனவரியில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 6 அக்டோபர் 6ம் தேதி தொடங்குகிறது. இந்த நிகழ்ச்சி குறித்த ப்ரோமோ கடந்த வாரம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here