கமல்ஹாசனும், ஷாருக்கானும் ஹேராம் படத்திற்கு பிறகு மீண்டும் இணைகின்றனர்.

0
5

கமல்-ஷாருக்கான்: ‘ஹேராம்’ படத்தில் கமல்ஹாசனுடன் கவுரவ வேடத்தில் ஷாருக்கான் நடித்திருந்தார். அதன் பிறகு ஷாருக்கான் நடித்த ‘மை ஹீ நா’ இந்திப் படத்தில் கமல்ஹாசன் நடிக்கும்படி படக்குழு சார்பில் கேட்கப்பட்டது. ஆனால் அந்த படத்தில் நடிக்க கமல்ஹாசன் மறுத்துவிட்டார். இதனால் ஷாருக்கான் இதைப் பற்றி ஒரு பேட்டியில் ஆதங்கம் அடைந்து பேசியிருந்தார். இந்நிலையில் இப்போது மீண்டும் இருவரையும் இணைத்து வைக்க இயக்குனர் மணிரத்னம் திட்டமிட்டுள்ளார்.

kamal hasan and sharukh khan reunite with after heyram movie

ஏற்கனவே ‘பொன்னியின் செல்வன்’ படத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்கும் அடுத்த படத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ளதாக அதிகார்ப்பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கஉள்ளது. இது பான் இந்தியா படமாக உருவாகிறது. அதனால் இந்த படத்தில் ஷாருக்கான், மம்முட்டி, சிவராஜ்குமார் என எல்லா மாநில சூப்பர் ஸ்டார்களையும் நடிக்க வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாம். இதுதொடர்பாக இயக்குனர் மணிரத்னம் ஷாருக்கானுடன் பேசி வருகிறாராம். ஆனால் ஷாருக்கான் தரப்பு இன்னும் சம்மதம் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here