கமல்ஹாசன்: மோகன் லால் நடிக்கும் மலையாள படத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளார். இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி மலையாளத்தில் அங்கமாலி டைரீஸ், ஜல்லிக்கட்டு படங்களை இயக்கினார். கடந்த வாரம் வெளியான மம்மூட்டியின் ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படத்தையும் பெல்லிசேரிதான் இயக்கினார். இந்நிலையில் அடுத்ததாக மோகன்லால், ராதிகா ஆப்தே நடிக்கும் ‘மலைக்கோட்டை வாலிபன்’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ராஜஸ்தானில் நடைபெற்று வருகிறது.
இதில் கெஸ்ட் ரோலில் நடிக்க கமல்ஹாசனிடம் கால்ஷூட் கேட்கப்பட்டது. இது தொடர்பாக மோகன்லாலே கமலிடம் பேசியிருக்கிறார். இதையடுத்து கமல்ஹாசன் இதில் நடிக்க ஒப்புக்காெண்டார். இதே படத்தில் மற்றொரு கேரக்டரில் நடிக்க ஜீவா தேர்வாகியுள்ளார். இதற்கு முன் ‘உன்னைப்போல் ஒருவன்’ படத்தில் கமல்ஹாசனும், மோகன் லாலும் இணைந்து நடித்துள்ளனர். ஏற்கனவே ‘அரண்’ படத்தில் மோகன்லாலுடன், ஜீவா நடித்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த மூவரும் ஒரே படத்தில் இணைந்து பணியாற்ற உள்ளது குறிப்பிடத்தக்கது.