கமல் ஹாசனின் அடுத்த புதிய திரைப்படம்

0
15

கமல் ஹாசன்: இந்திய திரையுலகினரால் உலக நாயகன்  என்றழைக்கப்படும் கமல் ஹாசன் அவர்கள் சிறு வயது முதலே திரைப்படங்களில் நடித்து வருபவர். ஏராளமான விருதுகளையும் பட்டங்களையும் பெற்றவர். திரைத்துறையில் அவருக்கு தெரியாத வேலைகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைத்து துறைகளிலும் பணியாற்றியவர். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், பாடலாசிரியர், பின்னணி பாடகர், தயாரிப்பாளர், சிறந்த நடனக் கலைஞர் என அனைத்து துறைகளிலும் சிறந்த பணியாற்றியவர். இன்றும் சிறப்பாக பணியாற்றி வருபவர். சிறந்த நடிகருக்கான தேசிய விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார். கலைமாமணி, பத்மஸ்ரீ போன்ற பட்டங்களையும் பெற்றுள்ளார்.

kamal hasans sabash naidu

இதற்கு முன்பு அவர் ஏற்று நடித்த சில கதாபாத்திரங்கள் இன்று வரை பெரும் வியப்பை ஏற்படுத்துவதாகவே அமைந்துள்ளன. இதில் அபூர்வ சகோதரர்கள், மூன்றாம் பிறை, இந்தியன், வாழ்வே மாயம், நாயகன், தசாவதாரம் பாேன்ற பல படங்கள் கமல் ஹாசன் அவர்களின் நடிப்பிற்கு மெருகேற்ற கூடியதாக அமைந்திருக்கும்.இந்தியன் திரைப்படத்திற்குப் பிறகு இயக்குனர் சங்கர்  மற்றும் கமல்ஹாசன் இருவரும் இணைந்து வேலை செய்யும் திரைப்படம் இந்தியன்2. சில பிரச்சினைகளின் காரணமாக இந்தியன் 2 படப்பிடிப்பு பாதியிலே நிறுத்தப்பட்டது.

அதன் பிறகு கமல் அவர்கள் அரசியலிலும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அவரது கட்சி அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டது. அதில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. மேலும் அவர் பண நெருக்கடியில் இருப்பதாகவும் பலவாறு கூறப்பட்டு வந்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கி கமல் அவர்கள் நடித்து வெளியான திரைப்படம் விக்ரம். இப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இப்படத்தின் இறுதியில் நடிகர் சூர்யா அவர்கள் நடித்த ரோலக்ஸ் என்ற கதாபாத்திரம் இரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இப்பட வெற்றிக்குப் பிறகு கமல் அவர்கள் மீண்டும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

கமல் அவர்களின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் நிறுவனம் சில சரிவுகளுக்குப் பிறகு விக்ரம் பட வெற்றியினால் மீண்டு வருவதாக கூறப்படுகிறது. அதனால் கமல் அவர்கள் 5 வருடத்திற்கு முன்பு பாதியில் நிறுத்தி வைத்திருந்த ‘சபாஷ் நாயுடு’ திரைப்படத்தை மீண்டும் தொடங்கப் போவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தில் கமல் ஹாசன், ஸ்ருதி ஹாசன், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தை லைகா புரொடக்ஷ்ன்ஸ் தயாரிக்கிறது. இப்படம் ஒரு காமெடி திரைப்படமாகும். பல்ராம் நாயுடு கதாபாத்திரத்திற்கு பிறகு மீண்டும் கமல் அவர்களின் காமெடி முகத்தை காண இரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here