Home செய்திகள் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகும் விக்ரம திரைப்படத்தின் ட்ரைலர் சர்வதேச அரங்கில்

கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகும் விக்ரம திரைப்படத்தின் ட்ரைலர் சர்வதேச அரங்கில்

0
22

கமல்ஹாசன் நடிப்பில் வெளியாக காத்து கொண்டிருக்கும் படத்தை பற்றிய அப்டேட் கிடைத்துள்ளது. உலகநாயகன் நடிக்கும் திரைப்படங்கள் பெரும் எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே நிலவ செய்யும் படமாக அமைந்து விடும்.

அவ்வகையில், மாஸ்டர் பட வெற்றியை தொடர்ந்து லோக்கேஷ் கனகராஜ் இயக்கத்தி்ல் விக்ரம் படம் உருவாகி உள்ளது. கமல், விஜய்சேதுபதி, ஃபகத் ஃபாசில் போன்றோரின் முன்னனி நடிப்பில் ‘ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷ்னல்‘ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கடந்த ஆண்டு வெளியான இப்படத்தின் முதல் பார்வை காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. ஜூன் மாதம் 3-ஆம் தேதி திரையரங்கில் இப்படம் வெளியாகவுள்ளது.

கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகும் விக்ரம திரைப்படத்தின் ட்ரைலர் சர்வதேச அரங்கில்
கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகும் விக்ரம் திரைப்படத்தின் ட்ரைலர் சர்வதேச அரங்கில்

இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் அறிவிப்பு வெளியாகியுள்ளது. மே 18-ஆம் தேதி பிரான்சில் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவில் இப்படத்தின் ட்ரைலரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.  மேலும், விஸ்டாவர்ஸ் மற்றும் லோட்டஸ் மெட்டா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தோடு இணைந்து விக்ரம் படத்தின் ‘என்எப்டி’-க்கள் வெளியாகும் என தெரிவித்துள்ளார்கள்.

இதற்காக ஃபேன்டிகோ என்னும் நிறுவனம் தங்களுடைய தனிப்பட்ட மெட்டாவெர்ஸ் எனப்படும் விர்ச்சுவல் உலகமான ‘விஸ்டாவெர்ஸ்’-ல் ‘விக்ரம்’ பட போஸ்டர்கள், கதாபாத்திரங்களின் வடிவங்கள் போன்றவற்றை வெளியிட உள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் படக்குழு தெரிவித்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here