இயக்குனர் லோக்கேஷ் கனகராஜ் உடன் இணையும் ரஜினி மற்றும் கமல் ஆனால், ஒரு பெரிய திருப்பம்
தமிழ்த் திரையுலகில் இன்று முன்னனி நடிகர்களாக உள்ள பலர் தயாரிப்பு நிறுவனம் வைத்துள்ளனர். நடிகர் சூரியா, சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின் என பலர் தயாரிப்பு நிறுவனங்களையும் நடத்தி வருகின்றனர். இதன் மூலம் தான் நடிக்கும் படத்திற்கும் புதியதாக வரும் படத்தையும் தயாரிக்கவும் அதன் மூலம் ஓரு தொகையையும் பெற முடியும்.
ஏனெனில், யாருக்கு யாருடைய மவுஸ் குறையும் என்று யாரும் கருதிவிட முடியாது. அதனால் ஓன்று இல்லை என்றால் என்ன இன்னொன்று என்று காலத்திற்கு ஏற்ப போக வேண்டும். அதனை மையப்படுத்தியே தயாரிப்பு நிறுவனங்களை நடிகர்கள் தான் நடத்துகின்றனர்.

இந்நிலையில், உலக நாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஒரு திரைப்படத்தில் நடிக்கவிருப்பதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் செய்தி வெளியானது.
ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு, ஊரடங்கு காரணமாக இந்த படம் தள்ளி வைக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் கமல், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான ’விக்ரம்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளது.
இந்த நிலையில் மீண்டும் ரஜினி, கமல், லோகேஷ் கூட்டணியை உருவாக்க முயற்சி எடுக்கப்பட்டதாகவும் இந்த முயற்சி தற்போது வெற்றி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதன்படி கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்றும் அதில் ரஜினிகாந்த் நடிப்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் அதே நேரத்தில் இந்த படத்தை கமல்ஹாசனுடன் இணைந்து ரஜினியும் தயாரிக்க இருப்பதாக கூறப்படுவது பெரும் திருப்பமாக உள்ளது. ரஜினிகாந்த் கடந்த பல வருடங்களாக திரைப்படம் தயாரிக்காத நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தற்போது தான் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.