“நடப்பவை பற்றி தான் பாடலில் எழுதியுள்ளேன்” கமல்ஹாசன் என கூறியுள்ளார். பத்தல பத்தல என விக்ரம் படத்தில் வரும் பாடலில் ஓன்றிய அரசை விமர்சித்து தான் பாடல் எழுதியுள்ளேன் ஓன்றியம் என்றால் ஓரு கட்சியை மட்டும் குறிப்பதல்ல அனைத்து ஓன்றியத்தையும் தான் என மநீம தலைவர் கமல் கூறியுள்ளார்.
உலக நாயகன் கமல்ஹாசன் இன்று ரசிகர்களுடன் ரத்த தான அமைப்பு (kamals blood commune) ஓன்றை தொடங்கினார்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் தான் விக்ரம் அதில் நடிகர் கமல், விஜய்சேதுபதி, சூரியா, பகத்பாசில் போன்ற முன்னனி நடிகர்கள் குழு நடித்துள்ளனர். இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இசைத்துள்ளார். ராஜ்கமல் பீலிம்ஸ் தயாரித்து ரெட் ஜெயின்ட் மூவிஸ் திரைப்படம் வினியோகம் செய்கிறது. இப்படம் ஜூன் 13 ல் வெளியான இப்படம் உலக அளவில் வசூல் சாதனை படைத்து வருகிறது.

அதே நேரத்தில் தமிழகம் தாண்டி அண்டை மாநிலம், நாடுகள் என அனைத்து இடங்களிலும் விக்ரம் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இந்நிலையில் படம் வெளியாகி 10 நாட்கள் முடிவடைந்த நிலையில் உலகம் முழுவதும் விக்ரம் ரூ 300 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. KGF2 மற்றும் விலிமை படதத்தின் வசூலை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், நடிகர் கமல்ஹாசன் ‘என்னை நடிக்க விட்டா 300 கோடி வரையில சம்பாதிப்பேன்’ என நாசுக்காக கூறியுள்ளார். திரையில் நடிக்க போயிட்டாருனு சொன்னாங்க ‘சிறையில் இருந்தால் தான் தலைவனு இல்ல திரையில் இருந்தாலும் தலைவர் தான்’ உலக நாயகன் கமல்ஹாசன் இன்று ரசிகர்களுடன் ரத்த தான அமைப்பு (kamals blood commune) ஓன்றை தொடங்கினார். அப்போது இதை தெரிவித்தார்.