2022ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட 10 படங்களில் கமலின் விக்ரம் இடம் பிடித்துள்ளது

0
6

விக்ரம்: 2020ம் ஆண்டிலிருந்து கொரோனா பரவல் காரணமாக திரையரங்குளில் படங்கள் வெளியாவது மிக மிக குறைந்தே காணப்பட்டது. ஓடிடியில் படங்கள் வெளியாகும் போக்கு நீடித்தது. இந்த நிலை 2022லிருந்துதான் கொஞ்சம் கொஞ்சமாக சரியாக தொடங்கியது. இந்த வருடம் திரைப்பட விரும்பிகள் கொண்டாடும் வருடமாகவே அமைந்தது. அதே நேரத்தில் திரைப்பட விரும்பிகள் அனைத்து படங்களையும் நேராக திரையரங்குகளில் சென்றுதான் பார்க்க வேண்டும் என விரும்பவில்லை. மிகவும் யோசித்துதான் விமர்சனங்களை பார்த்த பின்புதான் படம் பார்க்க செல்கின்றனர். ஒரு தியேட்டருக்கு சென்று படம் பார்க்கலாமா வேண்டாமா என்பதையே மக்கள் அப்படங்களின் விமர்சனங்களை பார்த்துதான் முடிவு செய்கின்றனர். அந்த வகையில் முக்கிய பங்கு வகிப்பது கூகுள் நிறுவனம் தான். அந்த வகையில் 2022ல் அதிகம் தேடப்பட்ட படங்கள் என்னென்ன என்பதை கூகுள் வெளியிட்டுள்ளது.

அந்த பட்டியல்

பிரம்மாஸ்திரா

கேஜிஎஃப் 2

தி காஷ்மீர் பைல்ஸ்

ஆர் ஆர் ஆர்

காந்தாரா

புஷ்பா 

விக்ரம் 

லால் சிங் சத்தா

த்ரிஷயம்2 

தோர்.லவ் அண்ட் தண்டர்

top 10 google searched movies list

இப்படியாக இந்த பட்டியலில் ரன்வீர் கபூர் – ஆலியா பட் நடித்த பிரம்மாஸ்திரா படம் முதல் இடத்தை பிடித்திருக்கிறது. இப்படம் பாலிவுட்டில் வெளியாகி ஒரே வாரத்தில் 300 கோடி வசூலித்து சாதனை படைத்தது. இவ்வருடம் கூகுளில் அதிகமான தேடப்படட்ட படங்களில் இப்படம் முதல் இடம் வகிக்கிறது. இதற்கு அடுத்த இடத்தில் கேஜிஎஃப்2 படம் உள்ளது. கன்னடத்தில் உருவான இப்படம் பான் இந்தியா படமாக வெளியாகி அனைத்து மாநிலங்களிலும் மாபெரும் வெற்றி பெற்றது. இதற்கு அடுத்த இடத்தில் காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் உள்ளது.

இந்த பட்டியலில் உள்ள பத்து படங்களில் ஒரேயொரு படம் மட்டும் தமிழ் படமாக அமைந்துள்ளது. அது நடிகர் கமல்ஹாசன் – பஹத் பாசில் – விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘விக்ரம்’ திரைப்படம். இப்படத்தில் நடிகர் சூர்யா சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் இப்படத்தை தயாரித்திருந்தது. கடந்த ஜூன் 3ம் தேதி வெளியான இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் 500 கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலை வாரிக்குவித்ததாக சொல்லப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here