கனவு பலன்கள் – என்ன கனவு வந்தால் என்ன பலன் தெரியுமா?

0
69

உறக்கத்தில் வரும் கனவு பலன்கள்: நீண்ட மற்றும் அயர்ந்த தூக்கத்தின் ஊடே நமக்கு கனவு வருகிறது. கனவுகள் வாயிலாக நமது எண்ணங்கள் செயல்பாடுகள் நாம் விரும்பியவைகள் நம் கனவுகளின் வழியே நிகழும். நம் மனதின் பிம்பமாக எண்ண ஓட்டத்தின் பிரதிபலிப்பாக கனவுகள் தோன்றுவதாக பல ஆய்வில் அறிஞர்கள் கூறியுள்ளனர்.

நாம் அனுபவித்த மிகவும் மகிழ்ச்சியான தருணங்கள் மீண்டும் மீண்டும் வந்து நம்மை அவ்விடத்திற்கே கொண்டு சென்று பழைய நினைவுகளை எழுப்பி நம்மை மகிழ்விக்கும். சிலருக்கு கனவுகளின் வழியே நடக்கக் கூடாத விஷயங்கள் கூட நடந்ததாக இருக்கும். இப்படி நல்ல கனவுகளும் நாம் விரும்பாத தீய கனவுகளும் வருவது இயற்கையே என்கின்றன கனவு பற்றிய நூல்கள்.

நாம் காணும் கனவுகளுக்கும் வாழ்வில் நடைமுறைக்கும் பல நேரடித் தொடர்பு உள்ளது. இதனை நம் பழந்தமிழர்கள் உணர்ந்து அதற்கான உண்மை பலன்களை வகுத்துள்ளனர்.

உறக்கத்தில் வரும் கனவு பலன்கள்

உறக்கத்தில் வரும் கனவு பலன்கள்
உறக்கத்தில் வரும் கனவு பலன்கள்

இப்படி நாம் காணும் கனவுகளுக்கு என்ன என்ன பலன்கள் என்பதை இங்கு பார்ப்போம்

இறந்தவர்கள் கனவில் வந்தால்:

  • நம் முன்னோர்கள் கனவில் வந்தால் அவர்களின் ஆசிர்வாதம் நமக்கு என்றும் நிலைத்து இருக்கிறது என்று அர்த்தம்.
  • அமாவாசை அன்று முன்னோர்களுக்கு எள் தண்ணீர் விட்டு வணங்குவது சிறப்பு அதனை செய்ய தவறிவிட்டால் அவருக்கு நியாபகம் செய்வதற்காகவும் முன்னோர்கள் கனவில் தோன்றுவார்கள்.
  • அமாவாசைகளில் விரதம் மேற்கொண்டு முன்னோர்களுக்கு தர்பனம் செய்து வழிபட்டு காக்கைக்கு உணவு கொடுக்க தவறினால் கனவின் மூலம் தெரியப்படுத்துவார்கள்.
  • நீங்கள் இறந்து போனவர்களுடன் பேசுவது போல் கனவு கண்டீர்கள் என்றால், உங்களுக்கு பெயரும், மிக சிறப்பான புகழும் உண்டாகும் என்பது பொருள்.
  • கனவுகளில் முன்னோர்கள் வந்தால் நமக்கு நன்மையே ஏன் என்றால் நாம் அவர்களின் மரபு வழி வந்தவர்கள் ஆதலால் நமக்கு நன்மை அளிப்பதையே அவர்கள் கருதுவார்கள்.
  • ஆண்டுக்கு ஓருமுறை நாம் முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய கடமையை செய்ய தவறும் போதும் கனவு மூலமாக வந்து அறிவுறுத்துவார்கள்.
  • ஒருவருக்கு அவர்களின் இறந்து போன தாய்-தந்தையர் கனவில் தோன்றுவார்களேயானால், கனவு கண்டவருக்கு வர இருக்கும் ஆபத்து அல்லது இடையூறைச் சுட்டிக்காட்டி எச்சரிக்க வந்திருக்கிறார்கள் என்று பொருள். இது பலரின் வாழ்வில் ஏற்பட்ட அனுபவ உண்மையாக உள்ளது.
  • இறந்தவர்கள் கனவில் வந்தால் பயப்படாமல் சிந்தித்து செயல்பட வேண்டும்.

இறந்த முன்னோர்கள் நம் குழந்தைகளுடன் இருப்பது போன்று கனவு கண்டாள்:

முன்னோர்களின் ஆன்மாக்கள் நம் குழந்தையை கண்டு மகிழ்கிறார்கள் மேலும், அக்குழந்தைகளின் குறும்புகளை ரசிக்கின்றனர் என்று அர்த்தம்.

நன்றாக இருக்கும் நம் உறவினர் இறந்ததாக கனவு கண்டால்:

உயிருடன் இருக்கும் உறவு முறையினர் இறந்ததாக கனவு கண்டால் உயிருடன் இருக்கும் உறவினரின் ஆயுள் கெட்டியாகும் என்று கூறுவர்.

உறவினருக்கு ஏற்பட்ட துன்பங்கள் நீங்கி இன்பமு உண்டாகும் என்றும் அர்த்தம்.

தான் இறந்து விடுவது போல் கனவு கண்டால்:

சுக வாழ்வு ஏற்படும் நம் வாழ்வில் நன்மைகள் நடக்க போகிறது என்று அர்த்தம்.

நண்பன் இறந்ததாக கனவு கண்டால்:

உங்கள் நண்பன் ஒருவன் இறந்து போனது போல் கனவு வந்தால், வெகு விரைவில் ஏதேனும் நற்செய்தி ஒன்று வரும் என்பது பொருள்.

மனைவி இறப்பது போல் கனவு கண்டால்:

தன் மனைவிக்கு பிரசவத்தில் இரட்டை குழந்தை பிறக்கும் என்று முன்னோர்களின் வழக்காக உள்ளது.

மனைவி இறந்து மேலோகத்தில் இருப்பதாக கனவு கண்டால்:

இறந்து போன மனைவி, விண்ணுலகில் மகிழ்ச்சியாக இருப்பது போல் கனவு கண்டால், அவரின் வாழ்க்கை நிம்மதியாக அமையும். அதே நேரம் ,மறைந்த மனைவியின் முகம் துயரம் தோய்ந்ததாக இருப்பின் வாழ்க்கை நிலையற்றதாக மாறும்.

இறந்து போன தாய் தந்தை அடிக்கடி கனவில் தோன்றினால்:

கனவு கண்டவருக்கு வர இருக்கும் ஆபத்து அல்லது இடையூறைச் சுட்டிக்காட்டி எச்சரிக்க வந்திருக்கிறார்கள் என்று பொருள். இது பலரின் வாழ்வில் ஏற்பட்ட அனுபவ உண்மையாகும்.

நாம் பிறரை அடிப்பது போல் கனவு கண்டால்:

நாம் பிறரை அடிப்பது போல் கனவு கண்டால், நண்பர்களால் புகழப்படும் நிலை ஏற்படும். மேலும் புதிய நண்பர்கள் கிடைப்பார்கள், புகழ் பன்மடங்கு பெருகும்.

அடிப்பட்டு காயமடைந்திருப்பது போல் கனவு கண்டால்:

தன அபிவிருத்தி உண்டாகும். எனினும் கத்தி, துப்பாக்கியால் சுடப்பட்டு காயமடைந்ததாக கனவு காண்பது நன்மையான பலன் தராது. உங்களுக்கு பழி ஏதேனும் வந்து சேரும்.

மதிப்பு மிக்கவருடன் அறிமுகம் ஆவது போல் கனவு கண்டால்:

சமூகத்தில் மதிப்பு, மரியாதை, அந்தஸத்து கிடைக்கப் போகிறது என்று அர்த்தம்.

மணமாகாத பெண்கள் மதிப்பு மிக்கவருடன் அறிமுகம் ஆவது போல் கனவு கண்டால்:

அவளை மணம் முடிக்க போகும் வருங்கால கணவன், அப்பெண்ணின் குடும்பத்தைவிட பன்மடங்கு வசதி மிக்கவனாக இருப்பான் என கொள்ளலாம்.

இதையும் படிக்க: ராசி பெயர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்

அரசியல் தலைவர்களுடன் பழகுவது போல் கனவு கண்டால்:

நண்பர்களின் மூலம் பணஉதவி கிடைக்கக் கூடும்.

தேவலோகப் பெண்களை ஆண்கள் தங்களின் கனவில் கண்டால்:

எதிர்பாராத நன்மைகள் அவர்களுக்கு உண்டாகும். திருமணமாகாத பெண்களின் கனவில் வந்தால் விரைவில் அப்பெண்களுக்கு திருமணம் நிகழும். திருமணமான பெண்கள் கனவில் வந்தால் மிகுந்த பொருள் வரவு உண்டு.

அழகற்ற பெண் கனவில் வந்தால் என்ன பலன்:

அழகு இல்லாத பெண் ஒருத்தியை, திருமணமாகாத ஒரு ஆண்மகன் கனவில் காணும் பட்சத்தில், அதற்கு நேர்மாறான பலனாக மிகவும் அழகான பெண் அந்த ஆணுக்கு மனைவியாக அமைவாள்.

அதிசயமானவர் கனவில் வந்தால் என்ன பலன்:

பார்ப்பதற்கு விந்தையான மனிதன் அல்லது நூதனப் பொருட்கள் உங்கள் கனவில் வந்தால், எதிர்வரும் தீமையைச் சுட்டிக்காட்டும் அறிகுறியாகும். நம்பிக்கை மோசடி – ஏமாற்றம் போன்றவை ஏற்பட வாய்ப்பு அதிகமாகும். ஆகையால், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

சண்டைகளில் சிக்கிக் கொள்வது போல் கனவு வந்தால்:

அடிதடி, தகராறு, சண்டை சச்சரவுகளில் நீங்கள் சிக்கிக் கொண்டு தவிப்பது போல் கனவு வந்தால், உங்கள் வாழ்க்கை அமைதியானதாக உங்களை சுற்றியிருக்கும் எல்லோருடனும் சுமுக உறவு கொண்டதாக அமையும்.

பிறரர் நம்மை அடிப்பது போன்று கனவு கண்டால்:

நமக்கு பகைவர்கள் இல்லை என்று அர்த்தம் பகைவர் இருந்தாலும் அதனை மறந்து பகைவர் நண்பர்களாக மாறும் நிலை உண்டாகும்.

அழுவது போல் கனவு தோன்றினால்:

வாழ்க்கையில் இடையூறுகள் ஏற்படலாம் எச்சரிக்கையாக இருப்புது நல்லது.

ஆபத்தில் சிக்குவது போல் கனவு கண்டால்:

உங்களுக்கு ஏதேனும் ஆபத்து, தொல்லைஏற்படுவதாக கனவு கண்டால், பலன் அதற்கு நேர்மாறாக வாழ்க்கை மகிழ்ச்சியானதாக, நிம்மதியுடையதாக அமையும். மற்றவர்கள் ஆபத்தில் சிக்கியிருப்பது போல் கனவு கண்டால், நண்பர்களால் தொந்தரவுகள் உண்டாகும்.

அரிசி மற்றும் தானியங்கள் கனவில் தோன்றினால்:

தாம் செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும் தொழில் அபிவிருத்தி ஆகும். மேலும், அரிசி வாங்குவது போன்றோ அல்லது அரிசியை கனவில் கண்டாலோ தொழில் செழித்தோங்கும் என்று அர்த்தம்.

கனவில் கருப்பு அன்னப் பறவையை கண்டால் என்ன கனவு பலன்கள்:

திருமணமாகாத இளம் பெண் ஒருத்தியின் கனவில் கறுப்பு அன்னப் பறவை கனவில் வந்தால், வெகு விரைவில் அப்பெண் ஏதேனும் வருத்தத்துக்கு உரிய செய்தியைக் கேட்க நேரிடலாம். அதே சமயம் வெள்ளைநிற அன்னத்தைக் காண்பவர் வாழ்க்கை மகிழ்ச்சியும், இன்பங்களும் அதிகம் நிறைந்ததாக இருக்கும்.

கல்வி போதித்த ஆசிரியர் கனவில் வந்தால்:

வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கக் கூடும். தாம் செயல் புரியும் பணியில் உயர் பதவி மற்றும் மேம்பாடு அடையலாம்.

கோயில் கோபுரத்தை கனவில் காண நேரிட்டால்:

நமது கனவில் இறைவன் வாழும் கோயிலைக் காண்பது நன்மையான பலன்களைத் தரும். செய்யும் தொழில், வியாபாரம் முன்னேறும். நவீன ரக தொழில்களில் ஈடுபாடு உண்டாகும். மக்களுக்கு சேவைப் புரியும் அறச்செயல்களில் ஈடுபட்டு புகழ் பெற வழிவகை செய்யும். புனித யாத்திரைகள் மேற்கொள்ளும் சூழல் உண்டாகும்.

பாழடைந்த கோவிலை கனவில் கண்டால்:

பாழடைந்த அல்லது தெய்வ விக்ரகம் இல்லாத கோயிலைக் கனவில் காண்பது நல்லதல்ல. அத்தகைய கனவினை காணும் போது நீங்கள் முயற்சிக்கும் செயல்களில் தோல்வி, பொருள் நஷ்டம் போன்ற தீய பலன்கள் கிடைக்கக் கூடும்.

ஆலமரத்தை கனவில் கண்டால் என்ன கனவு பலன்கள்:

உங்கள் கனவில் ஆலமரத்தைக் கண்டால், நீங்கள் செய்கின்ற தொழில் மேலும் அபிவிருத்தி ஆகும். பொருள் வரவும், உங்களின் சுற்றத்தார் இணக்கமும், பாசமும் உண்டாகும்.

இரும்பு போன்ற கருவிகள் கனவில் கண்டால்:

இரும்பை கனவில் காண்பவருக்குப் பொதுவாகவே மனோவலிமை அதிகமிருக்கும். ஆனாலும் மிகவும் பாதுகாப்புடன் இருக்கவேண்டும். சிலருக்கு கஷ்டங்கள் வந்து நீங்கும். வேறு சிலருக்கு, தரித்திர நிலையை உண்டாக்கும். இரும்பைத் தொட்டு கையில் எடுப்பது போல் கனவு காண்பது சிறந்த பலனை தராது.

அலுவலகத்தில் பணிப்புரிவது போல் கனவு கண்டால்:

நீங்கள் ஏதேனும் ஒரு அலுவலகத்தில் பணியாற்றுவதுபோல் கனவு கண்டால் உங்களுக்கு நற்காலம் நெருங்கி விட்டது என்பதற்கான அறிகுறியாகும். வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு உடனடியாக வேலை கிடைக்கும் என்பதை இது குறிக்கும்.

வறுமை நிலை அடைவது போல் கனவு கண்டால்:

கனவில் ஒருவர் தாம் மிகவும் ஏழ்மை நிலையை அடைந்து விட்டாற்போல கண்டால், எதிர்பாராத வகையில் அவருக்கு திரண்ட செல்வம் வந்து சேரும். எல்லா வகையிலும் முன்னேறி உயர் நிலையை அடைவார்.

ஏமாறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்:

ஒருவர் தாம் ஏமாற்றப்பட்டது போல் கனவு கண்டால், அவருக்கு தீமைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. வஞ்சக சூழ்ச்சிகளுக்கு அவர் ஆளாகி செல்வம் இழக்க நேரிடலாம்.

யானை ஆசிர்வதிப்பது போல் கனவு கண்டால்:

தான் மேற்கொள்ளும் அனைத்து சுபக் காரியங்களும் வெற்றியை தரும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

இறந்தவர்களின் சடலங்களை கனவில் பார்த்தால் என்ன பலன்:

சுபநிகழ்ச்சி உண்டாகும் வாழ்வு மேன்மையுரும்.

மயில் கனவில் வந்தால்: 

கணவன் மனைவி இடையே அன்யூனியம் அதிகரித்து இன்ப வாழ்வு மேலோங்கும்.

கோவில் மணியோசை கனவில் கேட்டால் என்ன பலன்:

குழந்தை இல்லா தம்பதிகளுக்கு விரைவில் குழந்தைப் பேறு கிடைக்கப் பெறும்.

மாமிசம் கனவில் வந்தால்:

மாமிசம் உண்பது போல் கனவில் தோன்றினால் அதிர்ஷ்டம் உண்டாகும்.

பாம்பு இறந்ததை கனவில் கண்டால்:

பாம்பு இறந்து கிடப்பது போல் கனவில் கண்டால் இதுநாள் வரை முயற்சிகளில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்க பெறும்.

கனவில் விருந்தில் கலந்து கொண்டால் என்ன பலன்:

விருந்தில் கலந்து கொண்டு உணவு சாப்பிடுவது போல் கனவு கண்டால் திருமண தடை நீங்கும் உத்தியோகத்தில் பதவி உயர்வு ஏற்படும்.

கனவில் பசுவைக் கண்டால்:

இது நாள் வரை இருந்த ஏழ்மை நிலை மாறி செல்வ வளம் பெருகும்.

பசுமாடு வாங்குவதாக கனவு கண்டால்:

பசு மாட்டினை வாங்குவது போல் கனவில் தோன்றினால் எதிர்காலத்தில் பணிகளில் மேன்மை ஏற்படும்.

பசு துரத்துவது போல் கனவு வந்தால் என்ன பலன்:

இதுவரை இருந்து வந்த வாழ்வில் சிறிது சிறிதாக உடல் ரீதியாக வியாதிகள் வருவதற்கான அறிகுறியாகும்.

பிச்சையிடுவது கனவில் வந்தால் என்ன பலன்:

இயலாதோருக்கு உணவு மற்றும் எதையாவது பிச்சை வழங்குவது போல் கனவு வந்தால் இன்பம் உண்டாகும்.

பிச்சை எடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்:

தொழிலில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய சமயம்.

காக்கை கரைவது போல் கனவு கண்டால் என்ன பலன்:

உறக்கத்தில் காக்கை கரைவது போல் கனவு வந்தால் விரைவில் வீட்டிற்கு விருந்தினர்கள் வருவார்கள் என்று அர்த்தம்.

மேலும், இது போன்ற ஜோதிடம், ஆன்மீகம், செய்திகள், சினிமா தொடர்பான செய்திகள் மற்றும் பல நல்ல தகவல்களை அறிய தலதமிழ் இணையதளத்தை பார்க்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here