சந்திரமுகி 2: ரஜினிகாந்த், ஜோதிகா, பிரபு, நயன்தாரா, வடிவேலு ஆகியோர் இணைந்து நடித்த படம் சந்திரமுகி. இப்படத்தை பி.வாசு இயக்கினார். இது மாபெரும் வெற்றி பெற்றது. இதன் பாடல்களும், கிளைமாக்ஸில் வரும் ஜோதிகாவின் சந்திரமுகி அவதாரமும் இன்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளன. இந்த படத்தின் 2வது பாகம் சந்திரமுகி-2 பெயரில் உருவாகி வருகிறது. இதில் வேட்டையன் கேரக்டரில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். சந்திரமுகியாக கங்கனா ரணாவத் நடிக்கிறார். ஹாரர் த்ரில்லர் படமாக இது உருவாகிறது. முதல் பாகத்தை இயக்கிய பி.வாசு இரண்டாம் பாகத்தையும் இயக்கி வருகிறார்.
இந்நிலையில் இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்கான படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. இதில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரணாவத் பங்கேற்று நடித்து வருகின்றனர். சந்திரமுகி அவதாரம் எடுத்து கங்கனா நடிக்கும் காட்சிக்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதற்காக 2 மணி நேரத்துக்கும் மேலாக கங்கனாவுக்கு மேக்கப் போடப்பட்டு படப்பிடிப்பு நடந்துள்ளது. இதில் நடித்தபடியே எமர்ஜென்சி என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார் கங்கனா ரணாவத்.