நடிகை விசாகா சிங் மருத்துவமனையில் அனுமதி

0
20

விசாகா சிங்: நடிகை விசாகா சிங் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தானம் நடித்த ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘வாலிப ராஜா’ உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்தவர் விசாகா சிங். இப்போது பட வாய்ப்புக்கள் இல்லாததால் மும்பையில் குடும்பத்தினரின் பிசினஸை கவனித்து வருகிறார்.

இவர் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கிறார். இவருக்கு ஏராளமான பாலோயர்கள் உள்ளனர். இந்நிலையில் திடீரென மருத்துவமனையில் படுத்திருக்கும் புகைப்படத்தை விசாகா சிங் வெளியிட்டுள்ளார்.

actress vishaka singh admitted in hospital

தொடர்ந்து உடல் நலம் பாதிக்கப்பட்டு வருவதாக அவர் அந்த புகைப்படத்துக்கு கீழே குறிப்பிட்டுள்ளார். ஆனால் என்ன பிரச்சினை என்பதை அவர் வெளிப்படுத்தவில்லை. இதையடுத்து விரைவில் குணமடைந்து நலம் பெற ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

விசாகா சிங் படுக்கையில் படுத்திருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி அவரது ரசிகர்களையும், பாலோயர்களையும் கலங்கடிக்க செய்துள்ளது. அவருக்கு என்ன பிரச்சினை என்று தெரியாமல் பலரும் குழப்பத்தில் இருந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here