தர்ஷன்: சினிமா நடிகர்களின் பெயரையோ, உருவத்தையோ உடலில் பச்சை குத்தி ரசிகர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்துவது தான் வழக்கம். ஆனால் ஒரு ஸ்டார் நடிகர் தனது ரசிகர்களுக்காக பச்சை குத்தியுள்ளது இதுவே முதல் முறையாகும். கன்னடத்தில் ஸ்டார் நடிகராக இருப்பவர் தர்ஷன். தனது ரசிகர்களுக்காக மார்பில் ‘என் பிரபலங்கள்’ என்று பச்சை குத்தி ரசிகர்களுக்கு மரியாதை செலுத்தியுள்ளார். பச்சை குத்திய உடலுடன் போட்டோவுக்கும் அவர் போஸ் கொடுத்துள்ளார்.
ஸ்டார் நடிகர்களில் ரசிகர்களுக்காக பச்சை குத்திய முதல் நடிகர் தர்ஷன்தான் என அவரது ரசிகர்கள் பெருமையுடன் கூறி வருகின்றனர். தான் மார்பில் டாட்டூ குத்திய வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளார் நடிகர் தர்ஷன். உங்களின் ரசிகனாக இருப்பதே எங்களுக்கு பெரும் பாக்கியம் என்று சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.