கர்நாடகா: கர்நாடகாவில் ரெய்ச்சூர் மாவட்ட கிராமத்தில் பலருக்கு சிப்ஸ் பாக்கெட்டுகளில் 500 ரூபாய் நோட்டுகள் கிடைத்துள்ளதாக கூறினர். இதுவரை அந்த பகுதியில் உள்ள மக்கள் 30,000 வரை சிப்ஸ் பாக்கெட்டுகள் மூலம் பெற்றுள்ளதாக தகவல். இதன் காரணமாக அனைத்து கிராமம் முதல் நகரம் வரை உள்ள அனைத்து கடைகளிலும் உள்ள குறிப்பிட்ட பெயரை உடைய சிப்ஸ் பாக்கெட்டுகள் சில மணி நேரங்களிலேயே விற்றுத் தீர்ந்துள்ளது.
நொறுக்குத் தீனிகளில் சமோசா முன்னணியில் இருந்து வந்தாலும் குழந்தைகளை கவர்ந்து வருவது சிப்ஸ் வகைகள் தான் இந்த சிப்ஸ் வகைகளை விளம்பரம் செய்யும் விதங்களும் அதன் விற்பனையை அதிகரிக்க உதவுகிறது. என்ன தான் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட சிப்ஸ் வகைகள் தீங்கு விளைவித்தாலும் விளம்பரங்கள் மூலம் குழந்தைகளை கவர்ந்து இழுத்து விடுகின்றனர் அதன் நிறுவனங்கள்.

அந்த வகையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சிப்ஸ் குறுப்பிட்ட சிப்ஸ் பாக்கெட்டுகளை தேடி அலைந்து வாங்கியுள்ளனர். அதன் காரணமாக அந்த சிப்ஸ் பாக்கெட்டுகள் அனைத்தும் சில மணி நேரங்களிலேயே விற்று தீர்ந்து உள்ளது.
என்ன என்று ஆராயும் போது தான் தெரிந்தது. அந்த சிப்ஸ் பாக்கெட்டுகளில் 500 ரூபாய் கிடைத்துள்ளது. ஓரு கிராமத்திற்கு இதுவரை 30 ஆயிரம் ரூபாய் அளவில் கிடைத்துள்ளது. அதனாலேயே விரைவாக விற்று தீர்ந்துள்ளது. தற்போது அக்கிராமத்தினர் அந்த ரூபாய் நோட்டுகள் உண்மையா அல்லது கள்ள நோட்டா என்று ஆராய்ந்து வருகின்றனர்.
இது போன்று சில நிறுவனங்கள் தங்களின் சிப்ஸ் வகைகளை சந்தைப்படுத்த விற்பனை உத்தியை பயன்படுத்தி வருகின்றன. இதனால் அப்பகுதி மக்களிடையே பெரும் பரப்பரப்பு நிலவி வருகிறது.
இதையும் படியுங்கள்: இந்தியர்கள் விரும்பி உண்ணும் உணவு பிரியாணி-ஸ்விகி நிறுவனம்
இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.