விருமன் திரைப்பட இசை மற்றும் டிரைலர் மதுரை மாநகரின் முக்கிய இடமான ராஜா முத்தையா மன்றத்தில் இசை வெளியீட்டு விழா மிக சிறப்பாக நடந்தது தொடர்ந்து விருமன் திரைப்பட டீரைலரை இயக்குனர் ஷங்கர் பிரம்மாண்டமாக வெளியிட்டார்.
கொம்பன், மருது, புலிக்குத்தி பாண்டி, தேவராட்டம் போன்ற படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் முத்தையா. இவர் இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் விருமன். கார்த்தி ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் இப்படத்தின் மூலம் திரைத்துரைக்கு அறிமுகமாகி நடித்துள்ளார்.
அண்ணன் சூரியாவின் 2டி என்டர்டைமண்ட் தயாரிப்பில் ராஜ்கிரண், நகைச்சுவை நடிகர் சூரி, பிரகாஷ்ராஜ், ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து உள்ளார்.

இசை வெளியீட்டு விழாவில் பேசிய யுவன் கார்த்தி, சூர்யா, நான் எல்லாம் ஒரு குடும்பம் போல்தான். பள்ளியில் ஒன்றாக தான் படித்தோம். பள்ளிப் படிப்பில் தொடங்கி இவ்வளவு தூரம் வந்தது மிகப்பெரிய பயணம்.
பள்ளியில் ஹவுஸ் கேப்டன் சூர்யா தான். நான் எப்போதும் பள்ளிக்கு ஷூ, யூனிபார்ம் ஒழுங்காக அணியாமல் செல்வேன். ஆனால், அவர் பெர்ஃபெக்ட்டாக அணிந்து பள்ளிக்கு வந்து ‘யுவன் அவுட்’ என்று பள்ளி மைதானத்தில் என்னை ஓடவைப்பார். அன்றைக்கு என்னை ஓடவைத்ததற்கு நிறைய பாடல்கள் கொடுத்து அவரை ஆட வைத்தேன்” என்று கலகலப்பாக பேசினார்.
கிராமத்து கதை அம்சம் நிறைந்ததாக உள்ள படம் தென் தமிழகத்தைச் சுற்றி பல திரைப்பட காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு செல்வக்குமார் ஓளிப்பதிவு செய்துள்ளார்.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படமாக இருக்கிறது. மேலும், இப்படம் வருகின்ற ஆகஸ்ட 12ம் தேதி வெளியிடப்படுகிறது.