சென்னை: மெரினா கடற்கரையில் தமிழக முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞரின் நினைவிடம் அமைப்பதற்கான பணிகள் விறுவிறுப் படைந்துள்ளன. அடுத்தாண்டு ஜூன் 3ம் தேதி கருணாநிதியின் 100 வது பிறந்தநாளை முன்னிட்டு திறக்கவுள்ளனர். அதற்காக பணிகள் வேகம் எடுத்துள்ளன.
உலகின் இரண்டாவது பெரிய கடற்கரை தமிழகத்தில் உள்ள நிலையில் அங்கு ஏராளமான தமிழகத்தின் முக்கிய தலைவர்களின் சிலைகள் நிறைந்து காணப்படுகிறது. அது போல தமிழகத்தின் முன்னாள் தலைவர்களான அறிஞர் அண்ணா, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சி தலைவி ஜெ.ஜெயலலிதா போன்றோரின் சமாதிகளும் அவர்களை பற்றிய அருங்காட்சியங்களும் இடம் பெற்றுள்ளது.
தினமும் இந்த மாநகரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் அந்நகர மக்கள் அனைவரும் இவர்களின் சமாதிகளையும் அருங்காட்சிகளையும் கண்டு வருகின்றனர். மேலும், கடற்கரை ஆழகையும் கடல் அலைகளிலும் விளையாடி வருகின்றனர். சமீத்தில் மாற்றுத் திறனாளிகளின் கவலையை போக்கும் நோக்கில் அவர்களுக்கென்று பிரத்தியோகமாக சென்று பார்க்க மரப்பாதையை தமிழக அரசு தொடங்கியது.

மெரினாவை மேலும் அழகு சேர்க்கும் வகையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சமாதியை மேம்படுத்தவும் அருங்காட்சியகம் அமைக்கவும் திட்டமிடப்பட்டது. இதற்காக மெரினாவில் 2.21 ஏக்கர் நிலப்பரப்பில் அண்ணா சமாதிக்கு அருகில் ரூ 39 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நினைவிடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
கருணாநிதி நினைவிட முகப்பில் 3 வளைவுகள் அமைக்கும் பணி தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. இதற்காக அங்கு 15 அடி ஆழத்தில் துளைகள் போடப்பட்டு உள்ளது. 3 வளைவுகள் சிமெண்ட் கான்கிரீட்டில் அமைக்கப்படுகிறது. அந்த கான்கிரீட் வளைவுகளில் கிரானைட் அல்லது மார்பிள் கற்கள் பதிக்கப்பட உள்ளது. மேலும் திறந்த வெளிகாட்சி அரங்கம், அருங்காட்சியம் அமைக்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்: மாற்றுத் திறனாளிகளிடம் வரவேற்பை பெற்ற மெரினா கடற்கரை மரப்பாதை
கலைஞரின் 100 பிறந்தநாளுக்கு இன்னும் 6 மாத காலமே உள்ள நிலையில் இப்பணிகள் விறுவிறுப்படைந்துள்ளது.
இது போன்ற பல்வேறு விதமான தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.