கேத்ரினா: கூகுள் நிறுவனம் இந்த ஆண்டுக்கான அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் அதிகம் தேடப்பட்ட நடிகைகளில் உலக அளவில் பாலிவுட் நடிகை கேத்ரினா கைஃப் 4 வது இடத்தைப் பிடித்துள்ளார். அது தவிர ஆசிய அளவிலும், இந்திய அளவிலும் அவர் முதலிடத்தைப் பிடித்துள்ளார். நடிகை என்ற வகையில் மட்டுமின்றி ஒப்பனை துறையிலும் மிகச் சிறந்து விளங்கும் தொழிலதிபர் என்ற வகையிலும் அவர் அதிக அளவில் தேடப்பட்டுள்ளார்.
கடந்த 2003ல் இந்தியில் ‘பூம்’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் கேத்ரினா கைஃப். இதுவரை அவர் 40 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இது தவிர ‘மல்லீஸ்வரி’ என்ற தெலுங்கு படத்திலும், ‘பல்ராம் வெர்சஸ் தாராதாஸ்’ என்ற மலையாளப் படத்திலும் நடித்துள்ளார். இதுவரை அவர் தமிழில் நடிக்கவில்லை. தற்போது இந்தியில் விஜய் சேதுபதியுடன் ‘மெர்ரி கிறிஸ்மஸ்’ உள்பட வேறு சில படங்களில் நடித்து வருகிறார்.