கீர்த்தி ஷெட்டி: தெலுங்கு நடிகையான கீர்த்தி ஷெட்டி நடித்த ‘தி வாரியர்’ படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்றது. அப்படத்தில் இடம் பெற்ற ‘புல்லட்’ பாடல் மற்றும் அதில் இடம் பெற்ற நடனம் மூலம் புகழ் பெற்றார் கீர்த்தி ஷெட்டி. இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான கீர்த்தி ஷெட்டி அடுத்து நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக ‘வணங்கான்’ படத்தில் ஒப்பந்தமாகி இருந்தார். இயக்குனர் பாலாவுக்கும், சூர்யாவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடின் காரணமாக சூர்யா படத்திலிருந்து விலகிவிட்டார். இதையடுத்து நடிப்பதற்கு ஒப்பந்தமான கீர்த்தி ஷெட்டியையும் படத்திலிருந்து இயக்குனர் பாலா நீக்கிவிட்டார்.
தற்பாேது தெலுங்கில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யாவுடன் ‘கஸ்டடி’ படத்தில் நடித்து முடித்துள்ள அவர் அடுத்ததாக ஜெயம் ரவி ஜோடியாக நடிக்க இருக்கிறார். ஜெயம் ரவியின் 32வது படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. மிஷ்கினிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய புவனேஷ் அர்ஜூனன் இயக்குகிறார். இந்த படம் 100 கோடி பட்ஜெட்டில் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. இதில் கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.