கீர்த்தி சுரேஷ்: சினிமாவில் நடிக்கும் ஹீரோக்களும், ஹீரோயின்களும் தங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். தாங்கள் தொடர்ச்சியாக தீவிர உடற்பயிற்சியில் ஈடுபடுவதை வீடியோவாகவும், போட்டோக்களாகவும் நாள்தோறும் தங்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வருகின்றனர். அந்த வகையில் ராஷ்மிகா மந்தனா, ரகுல் பிரீத் சிங், சமந்தா உள்பட பலர் தாங்கள் ஜிம்மில் உடற்பயிற்சி செய்வதை இன்ஸ்டாகிராமில் வெளியிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை அவர்கள் வலியுறுத்துவதாக அவர்களுக்கு பாராட்டு கிடைத்துள்ளது.
தற்போது கீர்த்தி சுரேஷ் உடற்பயிற்சி செய்யும் வீடியோ மற்றும் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வித்தியாசமான முறையில் உடற்பயிற்சியில் ஈடுபடும் வீடியோவை அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதாவது ‘அனிமல் ப்ளோ’ அதாவது விலங்கு ஓட்டப் பயிற்சி என்றழைக்கப்படும் இந்த உடற்பயிற்சியானது யோகாசனம், தியானம், பிரேக்டான்ஸ் ஆகியவற்றை உள்ளடக்கியது என்று சொல்லப்படுகிறது.
அனிமல் ப்ளோ என்பது தரை அடிப்படையிலான உடல் எடை இயக்கத்தை வைத்து செய்யப்படும் உடற்பயிற்சி, வேகம், உடல் சக்தி, நெகிழ்வுத்தன்மை, உடல் இயக்கம், நிலைத்தன்மை போன்ற பல திறன்களை மேம்படுத்த மைக்ஃபிட்ச் என்பவரால் முதன்முதலில் வடிவமைக்கப்பட்டது. இந்நிலையில் முதல்முறையாக இந்த உடற்பயிற்சியை நிறைவு செய்துள்ளதாக கீர்த்தி சுரேஷ் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் இயற்கையுடன் ஒன்றிணைந்து இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.