கீர்த்தி: ஒரு படத்தில் பணியாற்றும் போது அந்த படத்தின் படப்பிடிப்பின் இறுதி நாளில் தொழிலாளர்களுக்கு பரிசளிப்பதை சில நடிகர்கள் வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். ஹீரோயின்களில் தொடர்ந்து இதுபோல் யாரும் செய்வதில்லை. சில ஹீரோயின்கள் மட்டும் சில படங்களில் இதுபோல் செய்வதுண்டு. அந்த வகையில் கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் தனது பட தொழிலாளர்களுக்கு திடீர் சர்ப்ரைஸ் பரிசு கொடுத்திருக்கிறார்.
தெலுங்கில் நானியுடன் அவர் நடித்துள்ள படம் ‘தசரா’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதி நாளில் தசரா படத்தில் பணியாற்றிய டெக்னீஷியன்கள், தொழிலாளர்கள் என 130 பேருக்கு தலா 2 கிராம் தங்க காசுகளை கீர்த்தி சுரேஷ் வழங்கினார். தமழில் உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக ‘மாமன்னன்’ படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இந்த படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இது தவிர ‘சைரன்’, ‘ரகு தாத்தா’, ‘ரிவால்வர் ரீட்டா’ ஆகிய தமிழ் படங்களிலும் அவர் நடித்து வருகிறார்.
தெலுங்கில் சிரஞ்சீவியின் தங்கையாக ‘போலாே ஷங்கர்’ படத்தில் கீர்த்தி நடிக்கிறார். இது தமிழில் வெளியான அஜித் குமார் நடித்த ‘வேதாளம்’ படத்தின் ரீமேக் ஆகும். இப்படத்தில் லட்சுமி மேனன் நடித்த வேடத்தில் தான் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.