மூன்றாம் பாலினத்தவர்களை நாம் கனிவன்போடு திருநங்கை என்று அழைக்கின்றோம். இந்த மூன்றாம் பாலினத்தவர்க்கு நாட்டிலேயே முதன் முறையாக குழந்தை பிறந்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
கேரளா மாநிலத்தில் ஆணாக இருந்து பெண்ணாக மாறியவருக்கும் பெண்ணாக இருந்து ஆணாக மாறிய ஜீயா, பவல் இருவருக்கும் குழந்தை பிறந்துள்ளது. இந்தியாவில் மூன்றாம் பாலினத்தவருக்கு குழந்தை பிறப்பது இதுவே முதன் முறையாக பார்க்கப்படுகிறது.
கேரளாவை சேர்ந்த ஜியா மற்றும் பவல் இருவரும் திருமணம் செய்து கொண்டு கடந்த 3 ஆண்டுகளாக தம்பதிகளாக வாழ்ந்து உள்ளனர். இவர்கள் இருவருக்கும் குழந்தை பெற்று கொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்து வந்துள்ளது. இதனை அடுத்து கேரளா கோழிக்கோட்டில் உள்ள மருத்துவ கல்லூரியில் உள்ள மருத்துவ குழுவினரிடம் கேட்டு அறிந்தனர்.

இதில் பெண்ணாக இருந்து ஆணாக மாறிய ஜஹத்துக்கு ஹார்மோன் அறுவை சிகிச்சை செய்தபோது, அவரின் மார்பகங்கள் மட்டும் நீக்கப்பட்டன. ஆனால், கருப்பை நீக்கப்படவில்லை. இதனால் ஜஹத் குழந்தை பெறுவது சாத்தியம் என்று மருத்துவக் குழுவினர் தெரிவித்தனர்.
இதையடுத்து, செயற்கை முறையில், ஜஹத் வயிற்றியல் கருஉண்டாக்கப்பட்டது. தான் கர்ப்பமாக இருப்பது குறித்து ஜஹத் சமீபத்தில் இஸ்டாகிராமில் புகைப்படம் வெளியிட அதுவும் வைரலானது. பெண்ணாக இருந்து ஆணாகமாறிய ஒருவரின் வயிற்றில் 8 மாத கரு வளர்ந்திருப்பது வியப்பாகப் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ஜிஹத் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் நேற்று காலை 9 மணிக்கு குழந்தை பிறந்தது. ஜிஹத் பவல் இருவருக்கும் அழகான குழந்தை பிறந்துள்ளதை சமூக வலைதளங்களில் மகிழ்வுடன் தெரிவித்திருந்தனர். பெண்ணாக இருந்து ஆணாக மாறிய ஓருவர் குழந்தை பெறுவது நாட்டிலேயே இதுவே முதன் முறை.
இதையும் படியுங்கள்: பிப்ரவரி 14: ‘Cow Hug Day’ – இந்திய விலங்குகள் நல வாரியம் சுற்றறிக்கை!
இது போன்ற தகவல்களுக்கு தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.