கேஜிஎஃப் பட ஹீரோ யாஷ் இந்தி படத்தில் நடிக்க மறுத்து விட்டார்

0
1

ஹீரோ யாஷ்: ‘கேஜிஎஃப்’ மற்றும் ‘கேஜிஎஃப் 2’ படங்களின் மூலம் இந்தியா முழுவதும் ரசிகர்களை பெற்றவர் கன்னட நடிகர் யாஷ். இப்படங்களினால் பான் இந்தியா நடிகராகிவிட்டார் ஹீரோ யாஷ். கேஜிஎஃப் படத்திற்கு பிறகு யாஷ் எந்த பட வாய்ப்பையும் ஒப்புக்கொள்ளவில்லை. ஏனெனில் கேஜிஎஃப் பட வெற்றிக்குப் பிறகு ரசிகர்கள் மத்தியில் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதனை நிறைவேற்றுவதற்காக அடுத்ததாக அவர் பிரம்மாண்ட படத்தில் நடிக்க விரும்புகிறார். இதற்கிடையே ரன்பீர் கபூர், அலியா பட் நடிப்பில் அனைத்து மொழிகளிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ‘பிரம்மாஸ்திரா’ திரைப்படத்தின் அடுத்த பாகம் உருவாகி வருகிறது. இதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஹிர்த்திக் ரோஷன் மற்றும் ரன்வீர் சிங் ஆகியோரிடம் படத்தின் இயக்குனர் அயன் முகர்ஜி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஆனால் அவர்கள் நடிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

next movie of kgf hero yash

பின்னர் நடிகர் யாஷிடம் அந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. தயாரிப்பாளர் கரண் ஜோஹரும் பேச்சுவார்த்தை நடத்தினார். இரண்டு முறை படக்குழுவினர் சந்தித்து பேசியும் யாஷ் நடிக்க மறுத்துவிட்டாராம். இந்த தகவல்கள் இப்போதுதான் வெளிவரத் தொடங்கியுள்ளது. அதேபோல் பாலிவுட்டின் பிரபல இயக்குனர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா ‘கர்ணா’ என்ற சரித்திர படத்தை இயக்க இருக்கிறார். இதில் நடிப்பதற்காகவும் நடிகர் யாஷ் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் கர்ணா படத்தில் நடிக்கவும் யாஷ் மறுத்துவிட்டாராம். ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்தில் அடுத்த படம் அமைய வேண்டும் என்று நடிகர் யாஷ் அவர்கள் நல்ல கதைக்காக காத்திருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here