சலார்: கன்னட நடிகர் யஷ் கேஜிஎஃப்பின் 2 பாகங்களிலும் நடித்து பான் இந்தியா நடிகராகிவிட்டார். குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் உலக அளவில் பெரும் வசூல் ஈட்டி மாபெரும் வெற்றி பெற்றது. இதையடுத்து யஷ் அடுத்த படங்களை தேர்வு செய்வதில் மிகவும் கவனமாக இருக்கிறார். ரசிகர்கள் அவர் மீது வைத்திருக்கும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அப்படம் அமைய வேண்டும் என்பதால் அவர் மிகவும் கவனமுடன் கதைகளை தேர்வு செய்து வருகிறார். இந்நிலையில் யஷ் நடித்த கேஜிஎஃப் படத்தை இயக்கியவர் பிரசாந்த் நீல்.
அவர் தற்போது பிரபாஸ் நடிக்கும் ‘சலார்’ என்ற பான் இந்தியா படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் பிரபாஸ்க்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடித்து வருகிறார். இப்படத்தை ஹோம் பாலே பிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்தில் வரதராஜ மன்னார் என்ற கேரக்டரில் பிருத்விராஜ் நடிப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சிறப்பு வேடம் ஒன்றில் யஷ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் யஷ் தோன்றும் காட்சிகள் ஏழு நிமிடங்கள் இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது.