கிண்டர் ஜாய் (KINDER JOY) எனப்படும் சாக்லெட் உலகில் உள்ள அனைத்து குழந்தைகளும் விரும்பும் ஓன்றாக உள்ளது. குழந்தைகளை கடைகளுக்கு அழைத்து சென்றால் அவர்கள் முதலில் கேட்கும் விருப்பமான தேர்வாக கிண்டர் ஜாய் உள்ளது.
அப்படி இருக்கையில் கிண்டர் ஜாயின் உணவுப் பொருட்களுக்கும் சால்மோனெல்லாவின் பரவலுக்கும் தொடர்பு இருப்பதாக ஐரோப்பிய உணவுப் பாதுகாப்பு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. (கிண்டர் ஜாய் பொருட்களை சாப்பிட்ட பிறகு பரவும் நோய் குறித்து இங்கிலாந்து உணவு பாதுகாப்பு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது).
யுனைடெட் கிங்டம், அயர்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்வீடன் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் கிட்டத்தட்ட 100 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.
கிண்டர் சர்ப்ரைஸ் சாப்பிட்டால் நோய் ஏற்படும் அபாயம்
லண்டனை மையமாக கொண்ட கிண்டர் ஜாய்களைத் தயாரிக்கும் நிறுவனமான ஃபெரெரோ, அதன் தயாரிப்புகளில் ஓன்றை ஆரோகியத்திற்கு கேடு விளைவிக்கும் என கருதுவதால் அதனை திரும்ப பெறுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. UK வின் Food Safety Agency (FSA) சில கிண்டர் பிராண்டுகளை தவிர்குமாறு நுகர்வோருக்குத் தெரிவித்துள்ளது. UKHSA மற்றும் ஐரோப்பாவின் சுகாதார நிறுவனமும் சோதனை செய்ததில் இங்கிலாந்தில் ஏற்படும் சால்மோனெல்லாவின் பரவலுக்கும் இந்நிறுவன பொருட்களுக்கும் தொடர்பு உள்ளதாக அறிவித்துள்ளது மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சால்மோனெல்லா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதால், Kinder Surprise தயாரிப்பின் சில தொகுதிகளை திரும்பப் பெறுவதாக நிறுவனம் கூறியுள்ளது. இந்நிறுவனத்தின் கூற்றுப்படி, கிண்டர் சர்ப்ரைஸின் 20 கிராம் பாக்கெட், 11 ஜூலை 2022 மற்றும் 7 அக்டோபர் 2022 க்கு இடையில் சிறந்த முன் தேதியைக் கொண்டுள்ளது, இது மட்டுமே திரும்பப் பெறப்படுகிறது.
வாடிக்கையாளர்கள் கிண்டர் ஜாய் சர்ப்ரைஸ் வாங்கியிருந்தால் அதனை உண்ணக் கூடாது என அந்நிறுவனம் கூறியுள்ளது. ஃபெரெரோ நிறுவனம் வாடிக்கையாளர் சேவை மைய எண்ணிணை தொடர்பு கொண்டால் பணம் திரும்ப கொடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது. தயாரிப்புகள் ஏன் திரும்ப வாங்கப்படுகிறது குறித்த விளக்கங்கள் அனைத்தும் சில்லறை மற்றும் மொத்த கடைகளிலும் தெரிவிக்கப்பட்டு கடைகளுக்கு முன்னர் ஓட்டப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
சால்மோனெல்லா தொற்று என்றால் என்ன?
சால்மோனெல்லா என்பது எண்டோரோபாக்டீரியாசியே குடும்பத்தின் தடி வடிவ கிராம்-எதிர்மறை பாக்டீரியாவின் ஒரு இனமாகும். சால்மோனெல்லாவின் இரண்டு இனங்கள் சால்மோனெல்லா என்டெரிகா மற்றும் சால்மோனெல்லா போங்கோரி. S. என்டெரிகா வகை இனமாகும், மேலும் 2,600 க்கும் மேற்பட்ட செரோடைப்களை உள்ளடக்கிய ஆறு கிளையினங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
மூல இறைச்சி, பேஸ்டுரைஸ் செய்யப்படாத பால், முட்டை, மாட்டிறைச்சி மற்றும் அதனை சார்ந்த பொருட்கள் மூலம் ஏற்படுகிறது. அசுத்தமான தண்ணீர், அசுத்தமான உணவு சாப்பிடுவதாலும் சால்மோனெல்லா தொற்று ஏற்படுகிறதாக ஆராய்ச்சி நிபுணர்கள் சொல்கின்றனர்.
சால்மோனெல்லா பாக்டீரியாவின் அறிகுறிகள்
- வயிற்று வலி
- குமட்டல்
- காய்ச்சல்
- சளி
- தலைவலி
- வயிற்றுப் போக்கு
- மலத்தில் இரத்தம் வருதல்
போன்றவைகள் இந்நோயின் அறிகுறிகளாகும். இளம் குழந்தைகள் முதல் வயது முதிர்ந்த முதியவர்கள் வரை தாக்குகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களையும் பலகீனமானவர்களையும் வெகுவாக இந்நோய் பாதிக்கின்றது. சால்மோனெல்லா தொற்று பொதுவாக 4 முதல் 7 நாட்கள் வரை இருக்கும்.