பிரபாஸ்-கீர்த்தி: வருண் தவன், கீர்த்தி சனோன் நடித்த பேடியா இந்தி படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது, கீர்த்தியின் வாழ்வில் உயரமான இளவரசர் ஒருவர் வந்திருக்கிறார் என வருண் தவன் கூறினார். இதையடுத்து அந்த நபர் பிரபாஸ்தான் என மீடியாவினர் கணித்தனர். பிரபாசுடன் ‘ஆதிபுருஷ்’ படத்தில் கீர்த்தி சனோன் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பின் போது இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. இதைப்பற்றி சமீபத்தில் கீர்த்தி சனோனிடம் நிருபர்கள் கேட்கும்போது, பிரபாசை காதலிக்கிறீர்களா என கேட்டனர். அதற்கு கீர்த்தி சனோன் காதலிக்கிறேனா நான் அவரை திருமணம் செய்யவும் ரெடி என கூறினார். இந்த பதிலை அவர் கேலியான சொன்னதாக சிலரும், சீரியஸாக சொன்னதாக சிலரும் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் இதைப்பற்றி அறிந்த நடிகை அனுஷ்கா அதிர்ச்சி அடைந்துள்ளாராம். பிரபாசுக்கு தற்போது 46 வயதாகிறது. அனுஷ்காவுக்கு 42 வயதாகிறது. அனுஷ்கா இதுவரை திருமணம் செய்யாமல் இருப்பது பிரபாசுக்காகத்தான் என்று கூறப்படுகிறது. பிரபாசுக்காக காத்திருக்கும் அனுஷ்கா தனக்கு தோஷம் இருப்பதாலயே திருமணத்தை தள்ளிப்போட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் கீர்த்தி சனோன் சொன்னது பற்றி அனுஷ்காவிடம் கேட்க முயன்ற போது அவர் செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்திருந்தார். கீர்த்தி சனோன் கூறிய பதிலால் கீர்த்திக்கும் பிரபாசுக்கும் இடையே காதல் உள்ளதா இல்லையா என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.