வணங்கான் படத்திலிருந்து கீர்த்தி ஷெட்டி நீக்கம்.

0
13

வணங்கான்: சூர்யா, கீர்த்தி ஷெட்டி நடிப்பில் இயக்குனர் பாலா இயக்கி வந்த படம் ‘வணங்கான்’. இந்த படத்தின் 2 ஷெட்யூல்கள் முடிந்த நிலையில் சூர்யாவுக்கும் பாலாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து இந்த படத்திலிருந்து சூர்யா விலகிவிட்டார். சூர்யாவின் 2டி நிறுவனம்தான் இப்படத்தை தயாரிக்க இருந்தது. சூர்யா விலகியதால் தயாரிப்பு நிறுவனமும் இப்படத்திலிருந்து விலகிக் கொண்டது. இதையடுத்து இந்த வேடத்தில் அதர்வா முரளி நடிப்பார் என கூறப்பட்டு வந்த நிலையில் அவர் நடிக்கவில்லை. ஆனால் அவருக்கு பதிலாக தற்போது அருண் விஜய் ஒப்பந்தமாகியுள்ளார்.

kirthi shetty rejects bala's vanangan movie

அதே போல் அப்படத்தில் ஹீரோயினாக கீர்த்தி ஷெட்டி நடித்து வந்த நிலையில் அவரையும் பாலா படத்திலிருந்து நீக்கியுள்ளார்.அவருக்கு பதிலாக கன்னட நடிகை ரோஷினி பிரகாஷ் ஹீரோயினாக நடிக்கிறார். ஏற்கனவே இவர் தமிழில் ஏமாலி, ஜடா ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். கன்னியாகுமரியில் நாளை முதல் இதன் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. முதல் ஷெட்யூலை 25 நாட்கள் நடத்த பாலா முடிவு செய்திருக்கிறார். இந்த ஆண்டிலேயே இப்படத்தை வெளியடவும் திட்டமிட்டுள்ளனர். இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here