திருமண பரிசாக பல கோடி மதிப்புள்ள பொருட்கள் பெற்ற நட்சத்திர தம்பதி

0
16

திருமண பரிசாக பல கோடி மதிப்புள்ள பொருட்களை பெற்ற நட்சத்திர தம்பதியாக வலம் வரும் இந்திய கிரிகெட் அணியின் வீரர் கே.எல். ராகுல் மற்றும் பாலிவுட் நடிகை அதியா ஷெட்டி இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுலுக்கும் பாலிவுட் நடிகையான அதியா ஷெட்டிக்கும் சமீபத்தில் மும்பையில் பிரம்மாண்டமான முறையில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு 3000 பேர் வரை அழைக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு இருவரின் சார்பாகவும் பல கோடி மதிப்பிலான பரிசு பொருட்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றது.

நட்ச்சத்திர தம்பதிகளுக்கு திரை உலகத்தினர், அரசியல் தலைவர்கள், விளையாட்டுத் துறையை சார்ந்த அதிகாரிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் என அனைவரும் பங்கு பெற்று வாழ்த்தியும் பரிசு பொருட்களை அள்ளி கொடுத்தும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளனர்.

திருமண பரிசாக பல கோடி மதிப்புள்ள பொருட்கள் பெற்ற நட்சத்திர தம்பதி

அதியாவின் தந்தையும் பிரபல பாலிவுட் நடிகருமான சுனில் ஷெட்டி, மகள் அதியா – மாப்பிள்ளை ராகுலுக்கு மும்பையில் 50 கோடி ரூபாய் மதிப்பிலான பிளாட் ஒன்றை பரிசளித்திருப்பதாக கூறப்படுகிறது.

அதியாவை பாலிவுட் திரைத்துறையில் அறிமுகம் செய்த சல்மான் கான், ராகுல் – அதியா ஷெட்டிக்கு 1.64 கோடி ரூபாய் மதிப்பிலான ஆடி காரை பரிசாக கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. நடிகர் ஜாக்கி ஷ்ராப் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான வாட்ச் ஒன்றை பரிசாக கொடுத்திருப்பதாகவும், அதியாவின் நெருங்கிய நண்பரான அர்ஜூன் கபூர் 1.5 கோடி ரூபாய் மதிப்பிலான வைர வளையலை பரிசளித்திருப்பதாக கூறப்படுகிறது.

இது ஓருபுறம் இருக்க ராகுலுக்கு முன்னாள் இந்திய அணியின் கேப்டன் தோனி 80 லட்சம் மதிப்புடைய கவாசகி நிஞ்சா என்ற பைக்கை பரிசாக அளித்துள்ளார். விராட் கோலி 2.17 கோடி மதிப்புடைய பி.எம்.டபள்யூ காரை பரிசாக அளித்தார். கோலியின் மனைவி அனுஷ்காவும் பாலிவுட் பிரபலம் என்பதாலும் கோலியின் நண்பர் ராகுல் என்பதாலும் இருவரின் சார்பாக இந்த விலை உயர்ந்த காரை பரிசாக அளித்துள்ளனர் என தெரிய வருகிறது.

இதையும் படியுங்கள்: சபரிமலைக்கு பெண்கள் அனுமதி குறித்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேச்சு

ராகுல் மற்றும் அதியா இருவரும் நட்சத்திர தம்பதிகளாக இருப்பதால் பரிசு பொருட்கள் பல கோடி மதிப்புடையதாக இருக்கிறது. இந்த செய்தி இணையங்களில் வைரலாகி வருகிறது.

இது போன்ற தகவல்களை அறிய தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here