அரைசதம் கடந்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய விராட் கோலி ஹாங்காங் அணியினருக்கு எதிராக ஓரு ஓவர் பந்து வீசி அசத்தினார்.
இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி சமீபகாலத்தில் அனைவரது பேச்சுக்கும் உட்பட்டவராக சித்தரிக்கப்பட்டார். காரணம் கடந்த 3 வருடங்களாக ஓரு சதம் கூட அடிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு அதனால் அவர் மனதளவில் பாதிக்கப்பட்டு ஓரு மாதம் ஓய்வில் இருந்து வந்தார்.
ஆசிய கோப்பையில் அவர் விளையாடுவாரா என்ற சந்தேகமே எழுந்தது. இந்நிலையில் அவர் பாகிஸ்தானுக்கு எதிராகவும் 35 ரன்கள் எடுத்து அசத்தினார். அதை போலவே நேற்று நடந்த ஹாங்காங் அணிக்கு எதிராக 44 பந்துகளில் 59 ரன்கள் குவித்து அசத்தினார். அவர் இது போன்ற காலத்தில் ரன்கள் அடிப்பது அவரின் ரசிகர்களுக்கும் அவருக்கும் மிகுந்த ஊக்கமாக இருக்கும்.
ஹாங்காங் அணியினருக்கு எதிராக 6வது பவுலராக விராட் கோலி ஒரு ஓவர் பந்துவீசினார். 17வது ஓவராக வீசிய அவர் 6 ரன்களை விட்டுக்கொடுத்தார். விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று நடந்த போட்டியில் சூரிய குமார் யாதவ் நாலாபுறமும் பந்தினை திருப்பி அடித்து ரகளை செய்தார். தனது 22 வது பந்தில் அரைசதம் கடந்து சாதனை புரிந்தார். அவர் இப்போட்டியில் 26 பந்துகளை எதிர்நோக்கி 69 ரன்களை பெற்றார். இறுதியாக இந்திய அணி 192 ரன்கள் பெற்றது.
கோலியும் சூரியகுமாரும் சேர்ந்து பெலியன் திரும்பும் போது விராட் தான் ஓரு சீனியர் என்று கூட கருதாமல் சூரயகுமாரை பார்த்து இரு கைகளையும் தூக்கியவாறு குனிந்து மரியாதை செய்தார். இதனை ஆங்கிலத்தில் Take a bow என்று சொல்வார்கள்.
உலகின் நம்பர் 1 கிரிக்கெட் வீரர் தனக்கு மரியாதை செய்ததை சூர்யகுமாரால் நம்ப முடியவில்லை. ரசிகர்களும் கோலிக்கு கொஞ்சம் கூட ஈகோ இல்லை என்று கூறி புகழ்ந்தும் பாரட்டியும் வருகின்றனர்.