இந்தியில் வெளியாகும் கோலமாவு கோகிலா ஓடிடி தளத்தில் வெளியாகிறது

0
8

இந்தியில் வெளியாகும் கோலமாவு கோகிலா ஓடிடி தளத்தில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 

தமிழில் 2018 ல் நெல்சன் தீலிப் குமார் இயக்கிய படம் தான் கோலமாவு கோகிலா இதன் மூலம் தான் நெல்சனுக்கு முன்னனி கதாநாயகர்களை இயக்கும் வாய்ப்பு வரப் பெற்றார். இதை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் என இயக்கத்தில் மாஸ் காட்டினார். இப்படங்களை தொடர்ந்து சூப்பர் ஸ்டாரை வைத்து 169 வது படத்தை இயக்கப்போவதும் உறுதியாகி அப்படத்திற்கு டைட்டிலும் வெளியானது.

கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாரா ஓரு மிடில் கிளாஸ் பெண்ணாக நடித்து இருப்பார். தத்தி தத்தி பேசும் நபராகவும் காட்டப்பட்டு இருப்பார். இப்படத்தில் சரண்யா பொன்வன்னன் , யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், சரவணன், பாலாஜி என நிறைய கதாபாத்திரங்கள் நடித்திருப்பர். இசையமைப்பாளர் அனிரூத் இப்படத்திற்கு இசை மூலம் மெறுகேற்றி இருப்பார். நகைச்சுவையும் தத்தளிக்கும் இப்படம் அனைவரும் விரும்பும் படமாக இருந்து வெற்றியும் பெற்றது.

இந்தியில் வெளியாகும் கோலமாவு கோகிலா ஜூலை 29 ல் ஓடிடி தளத்தில் வெளியாகிறது

இப்படத்தின் வெற்றி மூலம் கதாநாயகியாக நடித்து வந்த நயன்தாரா. தனக்கென தனிப்பாதையை வகுத்து தனக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தேர்ந்தெடுத்தார். அந்த வகையில் கோலமாவு கோகிலா, மாயா, இமைக்கா நொடிகள் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

தமிழில் ரசிகர்ளை வெகுவாக கவர்ந்த கோலமாவு கோகிலா படம் ஹிந்தியில் ரீமேக்காகி உள்ளது. இதில் நயன்தாரா நடித்த கதாபாத்திரத்தில் வலிமை தயாரிப்பாளர் போனி கபூரின் மகள் ஜான்வி கபூர் நடிக்கிறார். இப்படத்தின் பெயர் ‘குட்லக் ஜெர்ரி‘ இப்படத்தை சித்தார்த் சென் இயக்கியுள்ளார். ஜூலை 29 ம் தேதி  நேரடியாக OTT தளத்தில் வெளியாக உள்ளதாக இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here