கிருஷ்ண ஜெயந்தி வழிபாட்டு முறைகள்

0
8

கிருஷ்ண ஜெயந்தி விழபாட்டு முறைகள் என்பது பகவான் விஷ்ணுவின் அவதாரங்களில் ஓன்றான கிருஷ்ணரின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக கிருஷ்ண ஜெயந்தி விழா நாடு முழுவதும் இந்து மதத்தினரால் கொண்டாடப்படும் நாளாகும்.

அந்த கிருஷ்ண ஜெயந்தி விழாவானது இன்று வெகு சிறப்பாக அனைவரது வீட்டிலும் கிருஷ்ணர் அவதரித்த மதுரா மற்றும் கிருஷ்ணர் கோவில்களிலும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

பகவான் மகாவிஷ்ணு பல அவதாரங்களை எடுத்திருக்கிறார். அதில் கிருஷ்ணர் அவதாரம் சிறப்பு வாய்ந்தது. தேவகியின் கருவில் உதித்தது முதல் குழந்தையாய் மண்ணில் பிறப்பது வரை பல போராட்டங்களை சந்தித்து இருக்கிறார். அவர் பிறக்கும் முன்பே அவரை அழிக்க காத்திருந்தார் அவரது தாய்மாமன் கம்சன். அதையும் மீறி ஆவணி மாதம் ரோகிணி நட்சத்திரத்துடன் கூடிய அஷ்டமி திதியில் அவரது அவதாரம் நிகழ்ந்தது.

கிருஷ்ண ஜெயந்தி வழிபாட்டு முறைகள்

உலகத்தில் அதர்மம் எப்போதெல்லாம் தலை தூக்குகிறதோ அப்போதெல்லாம் கிருஷ்ணர் அவதரிப்பார் என்ற நம்பிக்கையும் உண்டு. அவ்வகையில் அதர்மத்தை அழிப்பதற்காக தோன்றிய நாளையே கிருஷ்ண ஜெயந்தி விழாவாக கொண்டாடுகிறோம்.

திதிகளில் அஷ்டமி, நவமி ஆகாத நாட்கள் என்பார்கள். ஆனால் பகவான் ராமர் அவதரித்தது நவமி திதியில், கிருஷ்ணர் அவதரித்தது அஷ்டமி திதியில். எனவே இந்த இரண்டு திதிகளுமே வழிபாட்டிற்கு உரிய திதிகளாக மாற்றி விட்டார் மகாவிஷ்ணு.ஒருத்தி மகனாய் பிறந்து இன்னொருத்தியின் மகனாக வளர்ந்தார் ஸ்ரீகிருஷ்ணர். பிறந்தது சிறையாக இருந்தாலும் வளர்ந்தது அன்னை யசோதாவின் மடியில்தான்.

பகவான் கிருஷ்ணரின் பிறந்தநாளை கோகுலாஷ்டமி, ஸ்ரீஜெயந்தி, ஜென்மாஷ்டமி என்று பலவிதமான பெயர்களில் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு நேற்றும் இன்றும் இரண்டு தினங்கள் ஸ்ரீ ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

கிருஷ்ண பரமாத்மாவிற்கு மிகவும் பிடித்தது வெண்ணை அந்த வெண்ணையை சிறு குழந்தையாக இருக்கும் பொழுது கோகுலத்தில் தன் நண்பர்களுடன் சேர்ந்து அனைவரது வீட்டில் உள்ள வெண்ணைகளை திருடி உண்பான். அவரது குறும்புகள் சொல்லி மாலாது. தாய் யசோதா அவரை கண்டித்து கொண்டே இருப்பார்.

கண்ணன் குழந்தையாக அவதரித்த பின்னர், நண்பர்களுடன் சேர்ந்து வெண்ணெய் திருடி உண்டு மகிழ்ந்தார். அந்த நிகழ்வை நினைவூட்டும் வகையில், பால், தயிர், வெண்ணெய், அவல், பழங்கள், வெண்ணெய் சர்க்கரை கலந்த நெய்வேதியங்களை படைக்க வேண்டும். மேலும், வெல்லச்சீடை, உப்புச் சீடை, கை முறுக்கு, அவல் லட்டு, தேன்குழல், திரட்டுப்பால் என குழந்தைகளுக்கு விருப்பமான தின்பண்டகள் படைக்கப்படுகின்றது.

கிருஷ்ணருக்கு இன்று மாலை 6.30 மணிக்கு மேல் பூஜைகள் செய்து வழிபாடுகள் நடத்துவது சிறப்பு மேலும், வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு கிருஷ்ணர் அலங்காரமும் ராதா அலங்காரமும் செய்து மகிழ்வர்.

இதையும் படியுங்கள்: விஷ்ணு சகஸ்வரநாமம் தமிழில் 

இந்நான்னாளில் தாம் நினைத்த காரியம் ஈடேற வேண்டுமானால் காலை முதல் மாலை வரை விரதம் மேற்கொண்டு பூஜைகள் முடிந்த பிறகு பிரசாதங்கள் அனைவருக்கும் கொடுத்து பின் தாமும் விரத்தை பிரதத்தின் மூலம் நிவர்த்தி செய்து வழிப்பட்டால் நினைத்த காரியம் ஈடேறும் என்பது இந்து மக்களின் பெரும் நம்பிக்கையாக உள்ளது.

இது போன்ற ஆன்மீகம், ஜோதிடம், தமிழ் இலக்கியங்கள், விளையாட்டு, செய்திகள் அனைத்தையும் தெரிந்து கொள்ள தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here