வாரிசு: விஜய், ராஷ்மிகா நடித்துள்ள வாரிசு படத்தில் ஒரு பெரிய நட்சத்திர கூட்டமே நடித்திருக்கும் நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய்யுடன் குஷ்பூ நடித்துள்ளதாக தகவல் வெளியானது. மேலும் அவர் ‘வாரிசு’ படத்தின் படப்பிடிப்பில் இருக்கும்போது வெளியான புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகியது.
இந்நிலையில் வாரிசு படம் தற்போது வெளியாகி உள்ள நிலையில் அதல் நடிகை குஷ்பூ நடித்த காட்சி இல்லாததை அறிந்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனையடுத்து விஜய், ராஷ்மிகாவுடன் குஷ்பூ இருக்கும் புகைப்படத்தை ரசிகர்கள் வெளியிட்டு நீங்கள் நடித்த இந்த காட்சி எங்கே? என கேள்வி எழுப்பி வருகின்றனர். அதற்கு குஷ்பூ பதில் சொல்லாமல் அமைதி காத்து வருகிறார்.
‘வாரிசு’ படத்தில் சங்கீதா மற்றும் ராஷ்மிகாவின் சித்தியாக குஷ்பூ நடித்திருந்ததாகவும், படத்தின் நீளம் கருதி அவரது காட்சிகளை நீக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே 2 மணி நேரம் 40 நிமிடங்கள் படம் ஓடுகிறது. அதனால் சில காட்சிகளை நீக்க வேண்டியதாகிவிட்டது. அதில் குஷ்பூ காட்சியும் அடங்கும் என சொல்லப்படுகிறது.