குஷ்பு சுந்தர்: தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நடிகை குஷ்பு நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பாஜ தலைவர் அண்ணாமலை உள்ளிட்டவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது குறித்து தனது டிவிட்டர் பதிவில் குஷ்பு கூறியதாவது,
‘என் மீது நம்பிக்கை வைத்து மிகப்பெரிய பொறுப்பை வழங்கிய பிரதமர் மோடி மற்றும் ஒன்றிய அரசுக்கு மிக்க நன்றி. உங்களின் தலைமையின் கீழ் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், உரிமைகளை பெற்று தரவும் கடின உழைப்பை செலுத்துவேன். இந்த பதவியில் என்னுடைய பணிகளை தொடங்க மிகவும் ஆர்வத்துடன் இருக்கிறேன்’ என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து பாஜ மாநில தலைவர் அண்ணாமலை தனது டிவிட்டர் பதிவில், ‘குஷ்புவிற்கு பாஜ சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம். இது அவருடைய இடைவிடாத அர்ப்பணிப்பு மற்றும் பெண்கள் உரிமைக்கான போராட்டம் ஆகியவற்றுக்காக கிடைத்த அங்கீகாரம் ‘ என்று பதிவிட்டுள்ளார். இதே போல நடிகை குஷ்புவுக்கு ஏராளமான பாஜவினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.