லோகேஷ்: லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ், நயன்தாரா நடி்ககும் படத்தை ரத்னகுமார் இயக்குகிறார். ‘மேயாத மான்’, ‘ஆடை’ படங்களை இயக்கியவர் ரத்னகுமார். இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தில் ஸ்கிரிப்ட் பணிகளில் பணியாற்றினார். பின்னர் தனது பட வேலைகளையும் தனியாக கவனித்து வந்தார். இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் ‘லியோ’ படத்திலும் பணியாற்றி வருகிறார். இதையடுத்து லோகேஷ் கனகராஜ் பட தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளார். அவர் தயாரிக்கும் படத்தை ரத்னகுமார் இயக்க இருக்கிறார்.
இதில் ஹீரோவாக ராகவா லாரன்ஸ், ஹீரோயினாக நயன்தாரா நடிக்கிறார்கள். ஹாரர் காமெடி படமாக இப்படம் உருவாகிறது. இந்த படத்திற்கான டெக்னீசியன்கள் மற்றும் துணை நடிகர்களுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த படம் மூலம் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பாளராக அவதாரம் எடுக்கிறார். இந்த படத்துக்கு பிறகு தொடர்ந்து படங்களை தயாரிக்க அவர் முடிவு செய்திருக்கிறார். இந்த படம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.