இந்தியாவில் வசிப்போருக்காகவும் அரசின் அனைத்து சமூக திட்டங்களும் அனைத்து மக்களுக்கும் சென்றடையவும் செயல்படுத்த திட்டங்களில் ஓன்று ஆதார் அட்டை இதன் மூலம் இந்திய குடிமகனாக உறுதிப்படுத்தும் அது போல தமிழ்நாட்டிலும் ஐடி கொண்டுவர திட்டம்.
ஆதாரில் 12 இலக்க எண் இருக்கும் அந்த எண் ஓவ்வொருக்கும் மாறுபடும் ஓரே எண் யாருக்கும் இருப்பது கிடையாது. அந்த ஆதார் மூலம் தனிநபர் விபரங்கள் சேகரித்து வைத்து இருக்கும் எந்த ஓரு விபரங்களும் பாதுகாப்பாக வைக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த ஆதாரில் கருவிழி, கைரோகை, புகைப்படம் என அனைத்தும் ஸ்கேன் ஆகி இருக்கும் அதனால் விரைவாக அடையாளம் காண முடியும் மேலும், மத்திய அரசின் அனைத்து திட்டங்களையும் பெற முடியும்.
இதை போல மக்கள் ஐடி என்று தமிழக அரசு செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. இதில் 10 முதல் 12 இலக்க எண்கள் வழங்கப்படும் என்றும் இதன் மூலம் சமூக நல திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு இந்த மக்கள் ஐடி எண் பயன்படுத்தப்படும் எனவும் கூறப்படுகிறது. மத்திய அரசின் ஆதார் எண் உள்ள நிலையில், மாநில அரசினால் தனி அடையாள எண் அளிக்கப்படவுள்ளது என்பதும், வட மாநிலத்தவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாட்டு மக்களுக்கென பிரத்யேகமாக அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்: சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை தொடங்கியது
இந்த அடையாள எண் வழங்க மென்பொருள் தயாரிப்பதற்கு டெண்டர் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருள் தயாரானதும் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் மாநில குடும்ப தரவுதளம் உருவாக்கப்படவுள்ளது.
இது போன்ற தகவல்களுக்கு தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.