மிஸ் மார்வல் முதல் எப்பிசோடில் லிங்கா பட பாடல் ஓளிப்பரப்பாகி தமிழ் ரசிகர்களை மகிழ்ச்சியில் திளைக்கிறது.
தெற்கு ஆசிய குடும்பங்களின் முகமாக வளரும் ஒரு பெண் சூப்பர்ஹீரோவின் வாழ்க்கைதான் Ms Marvel. டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் இன்று அதன் முதல் எபிசோடு வெளியாகியிருக்கிறது.

ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் இமான் வெல்லானி. சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் நடிக்கும் முதல் இஸ்லாமியப் பெண் இவர்தான். இமான் வெல்லானி கராச்சியில் பிறந்தவர் அவருக்கு ஓரு வயது இருக்கும் போதே அமெரிக்காவில் இடம் பெயர்ந்து விட்டனர். குழந்தையாக இருக்கும் போதே அவருக்கு சூப்பர் ஹீரோக்களின் மீது அர்வம் அதிகம். ஆதலால் தனது 13 வயதிலேயே பள்ளியில் நாடங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார்.
Ms Marvel தொலைகாட்சி தொடரில் மிகவும் கண்டிப்பான இஸ்லாமிய குடும்பத்தில் வளர்கிறார் கமலா கான். கேப்டன் மார்வெல்லின் தீவிர ரசிகையான கமலா முழுக்க முழுக்க சார்ந்திருப்பது ஃபேன்டஸி உலகில்தான். யார் என்ன பேசினாலும், கமலா ஃபேன்டஸி உலகிற்குள் சென்று விடுவாள். தன் தோழர் ப்ரூனோவுடன் இணைந்து வீட்டுக்குத் தெரியாமல் ‘அவெஞ்சர்ஸ் கான்’ (Avengers Con) நிகழ்வுக்குச் செல்ல திட்டமிடுகிறார். அப்போது அங்கு நடக்கும் பிரச்சனைகள்தான் முதல் எபிசோடின் கதை. இனி வாரா வாரம் ஒரு எபிசோடு என வெளியாக இருக்கிறது.
இத்தொடரின் முதல் எப்பிசோடில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த லிங்கா படத்தில் ஏஆர் ரகுமான் இசையில் எஸ் பி பாலசுப்பரமணியம் குறலில் வெளிவந்த ஓ நண்பனே என்ற பாடல் இடம் பெற்று அனைவரின் மகிழ்ச்சியையும் ஆராவாரத்தையும் பெற்று தந்துள்ளது.