இப்போது பனிக்காலம் தொடங்கிவிட்டது. அத்துடன் மழையும் சேரந்து கொண்டது. இந்த சூழ்நிலை முதலில் பாதிப்பது நம் உதடுகளைத்தான். இக்காலத்தில் நம் இதழ்கள் வறட்சியாகாமல் தடுப்பதற்கான சில வழிமுறைகள்.
1. இதழ்களை லிப் பாம் அல்லது லிப் மாய்ச்சுரைஸர் பயன்படுத்தி எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்திருப்பது நல்லது. குறிப்பாக ஏசி பயன்படுத்தும் அறையில் வாசலின் அல்லது தேங்காய் எண்ணெயை உதடுகளில் தடவிவிட்டு தூங்கவும்.
2. மேட் லிப்ஸ்டிக்குகள் விரைவில் இதழ்களை வறட்சியாகும். ஏற்கனவே வறண்ட சருமம் உள்ளவர்கள் சிறிது லிப் பாம் பயன்படுத்திவிட்டு மேட் லிப்ஸ்டிக் பயன்படுத்துவது நல்லது. பனிப்பத்து போன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்கலாம்.
3. கூடுமானவரை யூகலிப்டஸ், மென்தால், மின்ட் போன்றவைகள் நிறைந்த லிப் பாம்களை தவிர்க்கவும். பெரும்பாலும் இவைகள் இதழ்களின் கருநிறத்தை மாற்றும் லிப்பாம்களில் இருக்கும். இந்த பாம்கள் இதழ்களை மேற்கொண்டு வறட்சியாக்கும்.
4. நல்ல பிராண்ட், நல்ல தரமான லிப் பாம்கள் தேர்வு செய்வது அவசியம். இல்லை நம் பட்ஜெட் இவ்வளவுதான் என்று நினைத்தால் யோசிக்காமல் வீட்டில் இருக்கும் வாசலின், வெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்துவதே நல்லது.
5. நம்மில் சிலர் இதழ்களின் ஈரப்பதத்திற்காக நாவால் இதழ்களை வருடிக்கொண்டே இருப்பர். இதனால் எச்சில் பட்டு இதழ்கள் ஓரத்தில் புண்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். அதனால் எச்சிலால் இதழ்களை ஈரமாக்குவதை தவிர்க்கவும். மேலும் இந்த மாதிரியான பனிக்காலங்களில் நிறைய தண்ணீர் குடிப்பது அவசியமாகும். இது இதழ்களின் வறட்சியை தடுக்க உதவும்.