FEB 3ல் அன்று திரையரங்குகளில் வெளியாகும் படங்களில் முழுப் பட்டியலை இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.
திரைப்படங்கள் அதிக அளவில் வாரத்தின் வெள்ளிக்கிழமைகளில் வெளியாவதையே படக்குழுவினர் அனைவரும் விரும்புகின்றனர். அந்த வகையில் வரும் வாரம் பிப்ரவரியின் முதல் வாரத்தில் வரும் வெள்ளிக் கிழமையில் வெளியாகும் திரைப்படங்கள் எவை என்பதை இங்கு பார்ப்போம்.
த கிரேட் இந்தியன் கிச்சன்
மலையாளத்தில் நிமிஷா சஜயன் நடிப்பில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் பெற்று சூப்பர் ஹூட் படமாக அமைந்த இப்படத்தை தமிழில் ரீமெக் செய்ய கருதி ஜெயம் கொண்டான், கண்டேன் காதலை போன்ற படங்களை இயக்கிய ஆர். கண்ணன் ரீமெக் செய்துள்ளார். நிமிஷா கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். இவருடன் யோகிபாபு மற்றும் பாடகி சின்மயி அவருடைய கணவர் ராகுல் ரவீந்திரன் நடித்துள்ளார்.
பெண்களின் இல்லற வாழ்வில் காணப்படும் பிரச்சனைகளையும் வீட்டில் வேலை செய்தே காலம் செலவழிக்கும் மனைவி மார்களின் நிலைமையை எடுத்து கூறும் படமாக வெளிவந்து அனைவரது ஆதரவையும் பெற்ற திரைப்படம் வரும் பிப்ரவரி 3ந் தேதி வெளியாகிறது.

ரன் பேபி ரன்
இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. அறிமுக இயக்குனர் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் ஆர்.கே. பாலாஜி, ஐஸ்வர்யா ராஜேஷ், விவேக் பிரசன்னா, ராதிகா சரத்குமார், ஸ்ருதி வெங்கட், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். த்ரில்லர் படமாக உருவாக்கப்பட்டிருக்கும் படமானது வருகின்ற 3ந் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.
நான் கடவுள் இல்லை
நடிகரும் இயக்குனருமான சமுத்திரக்கனி, சாக்ஷி அகர்வால், சரவணன், இனியா, இமான் அண்ணாச்சி போன்றோர் நடித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பின்னர் எஸ்.ஏ.சி இயக்கியுள்ளார். குழந்தையை மையமாக உருவாக்கப்பட்ட கதைத் தளத்தில் இதுவும் 3ந் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தை ஸ்டோர் மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியடுகிறது.
பொம்மை நாயகி
நடிகர் யோகி பாபு மற்றும் சிறுமி ஸ்ரீமதி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை நீலம் புரோடைக்ஷன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. தந்தை மகள் உறவை அழுத்தமாக கூறியுள்ள படமாக வெளியாக உள்ளது. இதுவரை நகைச்சுவை நடிகராக யோகி பாபுவை பார்த்து வந்த ரசிகர்கள் இப்படத்தில் முதன் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் பார்க்க உள்ளனர். இப்படமும் ரசிகர்களிடையே எதிர்பார்பபை பெற்றுள்ள நிலையில் 3ம் தேதி வெளியாகிறது.
மைக்கேல்
சந்திப் கிஷன் கதாநாயகனாக நடித்து வில்லன் கதாபாத்திரத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்துள்ளார் இவர்களுடன் வரலட்சுமி சரத்குமார், கௌசிக், வாசுதேவ மேனன், அனுஷயா பரத்வாஜ் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். பான் இந்தியா படமாக வெளியாக உள்ள இப்படமும் வருகிற 3ந் தேதி வெளியாகிறது.
குற்றப் பிண்ணணி
பிரண்ட்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியாக உள்ள படம் தான் குற்றப் பின்னணி. இந்த படத்தில் ராட்சசன் படத்தில் கிறிஸ்டோபர் கேரக்டரில் நடித்த சரவணன் கதாநாயகனாக நடித்துள்ளார். என்.பி.இஸ்மாயில் இயக்கிய இந்த படத்தில் தீபாளி, தாட்சாயிணி, சிவா, ஹனிபா என பலரும் நடித்துள்ளனர். இந்த படமும் 3ந் தேதி வெளியாக உள்ளது.
தலைக் கூத்தல்
லென்ஸ் என்ற படத்தை இயக்கி கவனம் பெற்ற ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியாக உள்ள படம் தலைக்கூத்தல். ஓய்நாட் ஸ்டூடியோ சசிகாந்த் தயாரித்துள்ள இப்படத்தில் சமுத்திரகனி, வசுந்தரா, கதிர், வையாபுரி, முருகதாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும், இப்படமானது தென் தமிழகத்தில் அதிகமாக நடக்கும் வயது முதியவர்களை சொந்த குடும்பத்தினரை கருணை கொலை செய்வதை மையமாக கொண்டு இயக்கப்பட்ட படம் தலைக்கூத்தல். இந்த படம் பிப்ரவரி 3ஆம் தேதி திரையரங்களில் வெளியாக உள்ளது.
இதையும் படியுங்கள்: திருமண பரிசாக பல கோடி மதிப்புள்ள பொருட்கள் பெற்ற நட்சத்திர தம்பதி
இது போன்ற தகவல்களுக்கு தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.