பல்லி விழும் பலன்கள்: மனிதர்கள் ஆகிய நாம், நம் மீது பல்லி விழுந்தால் அதற்கான பலன்களை தேடுவோம். இங்கே அதற்க்கான பலன்கள், செய்ய வேண்டியவை, செய்ய கூடாதவை என அனைத்தும் குறிப்பிட்டு உள்ளது.
பல்லிகள் நம் முன்னோர்களின் வாழ்வு முதல் இன்றளவும் வீடுகளில் உலவும் ஒர் உயிரினமாகவே உள்ளது. அனைவரது வீடுகளிலும் பல்லிகள் ஓன்றுக்கு மேற்பட்டு காணப்படுகிறது. அது நம்மை தீண்டுவதில்லை மாறாக ஓரு சிலருக்கு அதை பார்த்தாலே அருவெறுப்பாக இருக்கும்.
வீட்டில் உள்ள பல்லிகள் கொசுக்கள், பூச்சுகள், சிறிய வண்டுகள், பல்லியை விட சிறிய உயிரினங்களை உட்கொண்டு வாழும்.
பல்லிகள் வளர வளர கொஞ்சம் பெரியதாக இருக்கும் நிலையில் நமக்கு அதை கண்டாலே அச்சமாக தோன்றும்.

Contents
இலக்கியங்களில் பல்லி
சங்க இலக்கியங்களிலும் பல்லிகள் காணப்பட்டதை பல இலக்கியங்கள் வாயிலாக அறியலாம். இலக்கியங்களில் பல்லி ஓரு நிமித்தம் (சகுனம்) பார்த்தலோடு தொடர்புப்படுத்தி பார்த்தனர். மேலும் இலக்கியங்களில் பல்லிகள் சத்தமிடுவதை நல்ல சகுனமாக (நிமித்தம்) பார்த்தனர்.
கணவன் வேலைக்காக வெளியில் சென்று திரும்புவதற்கு வெகு நாட்கள் ஆகும். தலைவிக்கு வேலைக்கு சென்ற கணவன் சீக்கிரம் வர வேண்டும் என்று தன் ஊரிலோ அல்லது வீட்டிலோ உள்ள இறைவனிடம் வேண்டுவாள் அப்போது பல்லிகள் சத்தமிடும் சத்தம் கேட்டல் நல்ல சகுனம் எனக் கருதி கணவர் விரைவில் வீடு வருவார் என்று நம்பிக்கையுடன் இருப்பாள்.
ஏனெனில், கணவன் செல்லும் வழி மிக கொடிய பாதைகளையும் கடுமையான காட்டு பகுதிகளையும் அச்சம் தரும் விலங்குகளையும் கடந்து நடந்தே செல்வான்.
ஆகையால் அவன் வேலை முடித்து வர சில நாட்கள் ஆகும். அரசனோடு போர் தொழிலுக்கு சென்றாலும் வெகு நாட்கள் ஆகும்.
அதுவரை தலைவி தலைவன் வரவை எண்ணி காத்துக் கொண்டு வீட்டில் இருப்பால் அப்போது அவள் குறி கேட்பால் அந்நேரம் பல்லி சத்தமிடும் அந்த சத்ததை நல்ல சகுனமாக கருதினர் நம் முன்னோர்கள் என இலக்கியங்கள் குறிப்பிடுகிறது.
பல்லி பற்றிய குறிப்பு
பல்லி விழும் பலன்கள் அறிவதற்கு முன், பல்லி பற்றிய சில குறிப்புகள் இங்கே காணவும்.
இறைவன் மனிதனோடு உரையாடவும் மனிதனின் அச்சத்தை போக்கவும் பல்லிகள் தோன்றியதாக புராணங்கள் கூறுகிறது. ஊர்வன உயிரினங்களில் ஒலியை எழுப்பும் சிறப்பு சக்தியை பல்லிக்கு மட்டுமே இறைவன் கொடுத்துள்ளார். பல்லியை கடவுளின் தூதன் என்று புராணங்கள் கூறுகின்றன.
பல்லி என்பது நவகிரகங்களில் கேதுவை குறிப்பதாகும். கேது என்பது ஸ்வரபானு என்கிற அசுரனின் உடலாகப் பார்க்கப்படுகிறது. நமது வீட்டில் சில நேரங்களில் பல்லி கத்தினாள் நல்லது நடக்கும் என வீட்டில் உள்ள பெரியவர்கள் சொல்லி கேட்டிருப்பீர்கள். சில நேரங்களில் பல்லி கத்தினாள் தீயவை நடக்கும் என்று கூறுவதும் உண்டு.
நம் உடல் மீது பல்லி எங்கு விழுகிறதோ அதை பொருத்தும், அது எழுப்பும் ஓசையை பொருத்தும் தனித் தனி பலன்கள் உண்டு என கௌரி பஞ்சாங்கம் கூறுகிறது. அந்த வகையில் பல்லி நம் உடம்பின் மீது விழுவதை வைத்தும் பலன்கள் சொல்லப்படுகின்றன.
பல்லி விழுவதால் ஏற்படும் பலன்களையும் தோஷத்தையும், தோஷத்தைப் போக்கும் பரிகாரம் என்ன என்பதையும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.
அக்காலத்தில் கௌரி பஞ்சாங்கம் சார்ந்த படிப்பு இருந்தது குறிப்பிட தக்கது.
பல்லி விழும் பலன்கள்
இங்கே குறிப்பிட்டுள்ள பல்லி விழும் பலன்கள், அதை தொடர்ந்து அதன் பரிகாரங்கள் கூறியுள்ளோம்.
- தலையின் இடது பகுதியில் பல்லி விழுந்தால் துன்பம் ஏற்படும்.
- தலையின் வலது பகுதியில் பல்லி விழுந்தால் கலகம் வரும்.
- நெற்றியின் இடது பகுதியில் பல்லி விழுந்தால் கீர்த்தி (புகழ்) உண்டாகும்.
- நெற்றியின் வலது பகுதியில் பல்லி விழுந்தால் லக்ஷ்மிகரம் உண்டாகும்.
- வயிற்றின் இடது பக்கத்தில் பல்லி விழுந்தால் மகிழ்ச்சி உண்டாகம்.
- வயிற்றின் வலது பக்கத்தில் பல்லி விழுந்தால் தானியம் மிகுதியாக சேரும்.
- முதுகு இடது பக்கம் பல்லி விழுந்தால் கவலை உண்டாகும்.
- முதுகு வலது பக்கம் பல்லி விழுந்தால் நஷ்டம் ஏற்படும்.
- கண் இடது பக்கம் பல்லி விழுந்தால் பயம் உண்டாகும்.
- கண் வலது பக்கம் பல்லி விழுந்தால் சுகம் உண்டாகும்.
- தோள் இடது பக்கம் பல்லி விழுந்தால் போகம் உண்டாகும்.
- வலது தோள் பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி உண்டாகும்.
- கணுக்கால் இடது பக்கம் பல்லி விழுந்தால் சுகம் ஏற்படும்.
- கணுக்கால் வலது பக்கம் பல்லி விழுந்தால் பிரயாணம் செய்ய நேரிடும்.
- மூக்கு இடது பக்கம் பல்லி-விழுந்தால் கவலை உண்டாகும்.
- மூக்கு வலது பக்கம் பல்லி விழுந்தால் வியாதி உண்டாகும்.
- மணிக்கட்டு இடது பக்கம் பல்லி விழுந்தால் கீர்த்தி உண்டாகும்.
- மணிக்கட்டு வலது பக்கம் பல்லி விழுந்தால் பீடை உண்டாகும்.
- தொடை இடது பக்கம் பல்லி விழுந்தால் சஞ்சலம் (குழப்பம்) உண்டாகும்.
- வலது பக்கம் பல்லி விழுந்தால் துக்கம் உண்டாகும்.
- நகம் இடது பக்கம் பல்லி விழுந்தால் நஷ்டம் உண்டாகும்.
- நகம் வலது பக்கம் பல்லி விழுந்தால் செலவு உண்டாகும்.
- காது இடது பக்கம் பல்லி விழுந்தால் லாபம் உண்டாகும்.
- காது வலது பக்கம் பல்லி விழுந்தால் ஆயுள் கூடும்.
- மார்பு இடது பக்கம் பல்லி விழுந்தால் சுகம் உண்டாகும்.
- மார்பு வலது பக்கம் பல்லி விழுந்தால் லாபம் உண்டாகும்.
- கழுத்து இடது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி உண்டாகும்.
- கழுத்து வலது பக்கம் பல்லி விழுந்தால் பகை உண்டாகும்.
- உதடு இடது பக்கம் பல்லி விழுந்தால் வரவு உண்டாகும்.
- உதடு வலது பக்கம் பல்லி விழுந்தால் கஷ்டம் உண்டாகும்.
- முழங்கால் இடது பக்கம் பல்லி விழுந்தால் பந்தனம் உண்டாகும்.
- முழங்கால் வலது பக்கம் பல்லி விழுந்தால் நஷ்டம் உண்டாகும்.
- பாத விரல் இடது பக்கம் பல்லி விழுந்தால் நோய் உண்டாகும்.
- பாத விரல் வலது பக்கம் பல்லி விழுந்தால் பயம் உண்டாகும்.
- இடது கை மீது பல்லி விழுந்தால் துன்பம் உண்டாகும்.
- வலது கை மீது பல்லி விழுந்தால் துக்கம் உண்டாகும்.
- பாதம் இடது பக்கம் பல்லி விழுந்தால் துக்கம் உண்டாகும்.
- பாதம் வலது பக்கம் பல்லி விழுந்தால் நோய் உண்டாகும்.
- தொப்புள் பகுதியில் பல்லி விழுந்தால், மிகவும் விலை மதிப்பு மிக்க பொருட்களான தங்கம், வைரம், விடூரியம், இரத்தினம் போன்ற பொருட்கள் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
பல்லி உடலில் விழுந்தால் முதலில் செய்ய வேண்டியவை
பல்லி நம் உடலில் எங்கு விழுந்தாலும் பயம் கொள்ளாமல் நிதானமாக முதலில் சுத்தமாக குளித்து விட்டு அருகில் உள்ள விநாயகர், முருகன், மாரியம்மன், சிவன், பெருமாள், அனுமான் என எதாவது ஓரு கோவிலுக்கு சென்று மனதாற எனக்கு எந்த துன்பமும் நேர கூடாது என்று வணங்கி வரவேண்டும்.
அப்படி அருகில் கோவில் இல்லாதவர்கள், முடியாதவர்கள் வீட்டில் உள்ள பூஜை அறையில் உள்ள உங்கள் குல தெய்வத்தை வணங்கி பின் அனைத்து தெய்வத்தையும் வணங்கி வருவது நல்லது.
பல்லி விழும் பலன்கள் – செய்ய வேண்டிய பரிகாரம்
சிவபெருமானுக்குரிய ம்ரித்யுன்ஜெய மந்திரத்தை ஜெபிப்பதாலும் பல்லி விழுந்ததால் ஏற்பட்ட தோஷத்தை நீக்கும்.
சித்த வைத்தியத்தில் மருந்தாகவும், கோயில் சடங்குகளில் அபிஷேக பொருளாகவும் பசு மாட்டிலிருந்து பெறப்படும் 5 விதமான பொருட்களால் செய்யப்படும் பஞ்சகவ்யா திகழ்கிறது. பசுமாட்டின் உடலில் தேவர்கள் வாசம் செய்கிறார்கள் என்பதால் பசுமாட்டிலிருந்து பெறப்படும் பஞ்சகவ்யாவை உண்பதால் பல்லி நம்மீது விழுந்ததால் ஏற்படும் தோஷம் நீங்குகிறது.
வசதி மிகுந்தவர்கள் கோயிலில் இருக்கும் தெய்வங்களுக்கு தங்கம் அல்லது தங்க ஆபரணங்களையோ தானமாக அளிப்பதாலும் பல்லி விழுந்ததால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும். மேலும் கோயில்களில் விளக்கெண்ணெய் கொண்டு மண் விளக்குகள் ஏற்றுவதாலும் பல்லி விழுந்ததால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும்.
பல்லி சாப விமோசன வரலாறு
திருமலை திருப்பதியில் தங்கப்பல்லி
இந்த தங்கப் பல்லியின் விலங்கியல் பெயர் “காலோடாக்டீலோடஸ் ஆரிஸ்’. இந்த உயிரினம் இரவில் மட்டுமே வெளியில் வரும் ஓர் அரிய வகையைச் சேர்ந்தது… முதிர், இள மஞ்சள் கலந்து தங்க நிறத்தில் ஒளிரும்… இது 150 மி.மீ. முதல் 180 மி.மீ. வரை நீளமாக வளரும்.
பெரும்பாலும் கற்பாறை இடுக்குகளில் மட்டுமே வாழும். சூரியஒளி படாத குளிர்ந்த பிரதேசங்களில் அதிக அளவில் காணப்படும் இந்தப் பல்லி, 40 முதல் 50 முட்டைகள் வரை இடும். சாதாரண பல்லி போலல்லாது விந்தையாக சத்தமிடும்.
தோஷம் போக்கும் வரதராஜ பெருமாள்
இவையெல்லாவற்றிற்கும் மேலான பரிகாரமாக இருப்பது காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் இருக்கின்ற தங்கம் மற்றும் வெள்ளியினால் செய்யப்பட்ட பல்லி உருவம்.
மேலும் அந்த பல்லி உருவத்தோடு சூரியன் மற்றும் சந்திரனின் சித்திரத்தையும் காண முடியும்.
தங்கம் மற்றும் வெள்ளியினால் செய்யப்பட்ட பல்லி உருவத்தை தொடுவதால் நம் மீதுள்ள ராகு – கேது, சனி போன்ற கிரகங்களின் தீய தாக்கங்கள் மற்றும் வருங்காலத்தில் வரப்போகும் தோஷங்கள் அனைத்தும் முற்றிலும் நீங்கும்.
பல்லிக்கு சில சக்திகள் இருக்கிறது.
அதனால் தான் காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோவிலில் கர்பகிரகத்தின் மேல் கூரையில் தங்கம் மற்றும் வெள்ளியில் பல்லி உருவங்கள் இடம்பெற்றிருக்கிறது.
அதே போல் ஸ்ரீரங்கம் ரங்கநாதன் சுவாமி கோவிலிலும் பல்லி வணங்கப்படுகிறது. பல்லி விழுவதால் ஏற்படும் தீமைகளுக்கு பரிகாரம் உள்ளது என பழைய சாஸ்திரங்கள் கூறுகின்றன.