லோகேஷ்: மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கியவர் லோகேஷ் கனகராஜ். கைதி, மாஸ்டர் படங்களின் மூலம் மிகவும் பிரபலமானார் அவர். தற்போது அவர் கமலை வைத்து இயக்கிய ‘விக்ரம்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து அவர் மீண்டும் நடிகர் விஜய்யுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். வாரிசு படத்திற்கு பிறகு விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘விஜய் 67’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய லோகேஷ் கனகராஜ், ‘வாரிசு படம் ரிலீஸாக வேண்டும் என்பதால்தான் ‘விஜய் 67′ குறித்து எந்த அப்டேட்டும் கொடுக்காமல் இருந்தோம். படம் ரிலீஸாகிவிட்டது. இன்னும் 10 நாட்களில் படத்தின் அப்டேட் வெளியாகும். படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
ரசிகர்கள் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து செயல்பட்டால் நன்றாக இருக்கும். இது வெறும் சினிமாதான். இதில் உயிரை கொடுக்கும் அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்க தேவையில்லை. பொழுதுபோக்கிற்கான விஷயம்தான். மகிழ்ச்சியாக சென்று படம் பார்த்து வீடு திரும்பினாலே போதுமானது. உயிரே போகும் அளவிற்கு கொண்டாட்டம் தேவையில்லை என்பது என் கருத்து’ என்று கூறினார்.